Thursday, August 24, 2023

*கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கும் வெற்றி துரைசாமி*

*கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கும் வெற்றி துரைசாமி*
விதார்த் -ரம்யா நம்பீசன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'என்றாவது ஒருநாள்'  திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி துரைசாமி, தற்போது புதிதாக பெயரிடப்படாத கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார். 
2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'என்றாவது ஒரு நாள்'. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று, திரை ஆர்வலர்களின் பாராட்டையும் பெற்றது.
இயக்குநர் வெற்றி துரைசாமி தற்போது இயக்கவுள்ள  திரைப்படத்தில் அனேக பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும் எனவும், மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக கிரைம் திரில்லர் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கும் வகையில் திரைக்கதை அமைந்திருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் நடிக நடிகையர், படக்குழு, டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Actor Karthi honours the Agricultural Community!

Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture. Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 L...