Tuesday, August 22, 2023

*மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் - மெகா157 அறிவிப்பு !!*


*மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV 
 கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட  மெகா மாஸ் திரைப்படம் - மெகா157 அறிவிப்பு !!*

இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அதை தனது பிம்பிசாரா திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர்  வசிஷ்டா  இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர்  மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம்,  சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும்  படமாக இருக்கும்.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவர்ஸை வசிஷ்டா நமக்குக் காட்டப் போகிறார். வசீகரிக்கும் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில்,  திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது. நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றை நாம் காணப் போகிறோம் என்பது இந்த அற்புதமான போஸ்டரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படம் என்பது அன்றாட யதார்த்தத்திலிருந்து நம்மை இலகுவாக்கி கொள்வதற்கான  ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், ஃபேண்டஸி ஜானர் கொண்ட ஒரு கதையில் உங்களை முற்றிலும் வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் இப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட திரைப்படத்தில் சிரஞ்சீவி போன்ற ஒரு நட்சத்திரம் நடித்தால், அது மிகவும் சுவாரஸ்யமாகவும் நம்மை எளிதில் கவர்ந்திழுக்ககூடியதாகவும்  இருக்கும். வசிஷ்டா தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தவர் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதால், #Mega157 ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.

நடிகர் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி 

தொழில் நுட்ப குழு 
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா 
தயாரிப்பாளர்கள் : வம்சி, பிரமோத், விக்ரம்
தயாரிப்பு நிறுவனம் : UV கிரியேஷன்ஸ்.

No comments:

Post a Comment

Actor Karthi honours the Agricultural Community!

Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture. Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 L...