*சுசி கணேசனின் “தில் ஹை கிரே' கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) “ ரெட் கார்பெட்”அந்தஸ்த்தோடு “ பிரத்யேக ப்ரீமியர் “ -ல் திரையிடப்பட்டு , பாராட்டுகளை அள்ளிக்குவித்தது.*
பார்வையாளர்கள் , “ பார்ட்-2 எப்போது வரும் ? என்று கூச்சலிட்டதோடு, திருப்பங்களுடன் கூடிய வலுவான கதைக்களத்திற்காக பிளாக்பஸ்டர் 'த்ரிஷ்யம்' -ஓடு ,ஒப்பிட்டு பேசினார்கள் .
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற
இயக்குனர் சுசி கணேசன் , முன்னணி நடிகர் அக்சய் ஓபராய்
ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார்கள்.
சுசி கணேசன் பேசும் போது “ பார்ட் 2 எப்போது என்று நீங்கள் கேட்பதே , படத்தின் வெற்றிக்கு அடையாளம் . இந்த உணர்வு , படப்பிடிப்பின் போதே ஏற்பட்டு , அதற்கான கதையைக்கூட விவாதித்துவிட்டோம் “ என்றார்.
சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் சித்தரிப்பையும் வலியுறுத்தினார். அவர் குறிப்பிடுகையில், "தினமும் சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்கள் நடக்கின்றன. தேவையற்ற தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வதால் தேவையில்லாத பிரச்சனைகளில்- தங்கை , மனைவி என நமது குடும்பத்து பெண்கள் -சிக்கிக்கொள்கிறார்கள்.
இது ஒரு படம் மட்டுமல்ல. சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையை எப்படித் தலைகீழாக மாற்றும் என்பதை உணர்த்தும் யதார்த்தமான பாடம் “ என்றார்.
அக்ஷய் ஓபராயிடம் ஒரு
பெண் ரசிகர் ‘ நிஜமான ஹாக்கர் போலவே படத்துல இருக்கீங்க எப்படி என கேட்க “
‘அந்தப் பெருமை சுசி சாருக்குச் சேரும். தனது நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை எப்படிப் பெறுவது என்பது அவருக்குத் தெரியும். எனது ஒவ்வொரு கண்ணசைவையும் தீர்மானித்தது அவரே" என்றார் .ஒரு ரசிகர் “ ஷாருக்கானுக்கு ஒரு ‘டர்’ போல , இந்த படம் உங்களுக்கு “ என பாராட்ட , அக்சய் ஓபராய் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.
மனித உணர்வுகள் மற்றும் சைபர் குறை பற்றிய சிக்கலான ஆய்வுகளை உள்ளடக்கிய இப்படம், திரைப்பட விழா பார்வையாளர்களிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது உரையாடலில் எதிரொலித்தது. இத்திரைப்படத்தில் ஊர்வசி ரவுடேலா, அக்ஷய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் .
முன்னதாக செப்டம்பர் மாதம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட “தி ஹே கிரே” அங்கும் அனைவரும் பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment