டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் 'பார்க்கிங்' திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் 'பார்க்கிங்'  திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!! 
இந்த ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அதிரடி டிராமா திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்தை டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில்  நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு  மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது.

ஒரு அழுத்தமான கதையை  பொழுதுபோக்கு வகையில் அழகாக சொல்லியுள்ள இந்தப் படம், பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்கும் இதே போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில், மிக அற்புதமான படைப்பாக அமைந்துள்ளது.

பார்க்கிங் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பிலோமின் ராஜ் செய்துள்ளார் மற்றும் கலை இயக்கத்தினை N K ராகுல் செய்துள்ளார்.

டிசம்பர் 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கிங் படத்தை கண்டுகளியுங்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

Comments

Popular posts from this blog

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்*

Maasoom Shankar- The Anastasia Steele of south cinema

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '