*ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது,டங்கி தற்போது டிராப் 4 வெளியானது!*
ஷாருக் கான் மற்றும் அவரது 'சார் உல்லு தே பத்தே' - ஆகியவை இணைந்து வாழ்நாள் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது
தி டங்கி: இந்த ஆண்டின் மிகவும் இதயத்தைத் தூண்டும் படமாக அமைந்துள்ள தி டங்கியின் டிராப் -4 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சியை அளித்துள்ளது. பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானியால் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஷாருக் கான் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. ரயிலில் நடிகர் ஷாருக் கான் (எஸ்ஆர்கே) பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக் கானின் கேரக்டர்) தொடங்கிறது. அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.
இந்த இதயத்தைத் தூண்டும் கதை, சவால்கள் மற்றும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்கள் நிறைந்த வெளிநாடுகளுக்கு ஒரு அசாதாரண பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது. அனைத்து விதமான எண்ணற்ற உணர்ச்சிகளையும் ஒரே ஃபிரேமில் தொகுத்து வழங்குகிறது இந்த டிராப்-4.
ராஜ்குமார் ஹிரானி, சிறப்பான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஷாருக்கானின் பிறந்தநாளில் டங்கி டிராப்-1 (Dunki Drop 1) வெளியானது. இதைத் தொடர்ந்து அர்ஜித் சிங்கின் இனிமையான குரலில் லுட் புட் கயா என்ற தலைப்பில் டங்கி டிராப் 2 வெளியானது.
டிராப்-3-ல் சோனு நிகாமின் ஆன்மாவைத் தூண்டும் பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே, ஒரு கூர்மையான மெல்லிசையுடன் அமைந்த பாடல் இதயங்களைக் கவர்ந்தது.
தற்போது டங்கி டிராப் 4, நட்பு மற்றும் அன்பின் அடுக்குகளை அழகாக விரித்து, டங்கி படத்தின் பாதையில் பார்வையாளர்களை பரபரப்பான பயணத்துக்கு அழைத்துச் செல்கிறது. நண்பர்கள் அவர்கள் விரும்பிய இலக்கை அடைய அவர்கள் செல்லும் பாதையைக் குறிக்கிறது. பழைய கேரக்டரில் ஷாருக் கான் தோன்று காட்சியுடன் டிரெய்லர் முடிவடைகிறது. இதன்மூலம் அசாதாரண பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, மேலும் பலவற்றுக்கா நம்மை ஏங்க வைக்கிறது இந்த டிராப்-4.
டங்கி வெறும் படம் அல்ல; இது ஒரு ஆழமான அனுபவம், இது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்துவதில் உறுதியளிக்கிறது. டங்கி படத்துடன் இணைந்து உணர்ச்சிகளின் ரோலர்கோஸ்டரில் பயணிக்கத் தயாராகுங்கள்—உங்கள் கனவுகள் பறக்கட்டும், நட்புகள் மலரட்டும், படத்தின் மாயாஜாலம் வெளிப்படட்டும்.
இந்த டிசம்பர் மாதத்தில், உங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்கு உரியவர்களுடனும் மகிழ்ச்சி தரும் வகையில் நீடித்த நினைவுகளை உருவாக்கி, நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான தருணங்களின் மகிழ்ச்சிகரமான கலவையை வழங்க டங்கி திரைப்படம் தயாராக உள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படம் 21 டிசம்பர் 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
https://bit.ly/DunkiDrop4-Trailer
No comments:
Post a Comment