Saturday, December 16, 2023

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில்,  நடிகர்  சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர். 

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர். 

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்று  “உடன்பால்” படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்,  இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர். 

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில்  உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லிய இந்த திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இத்திரையிடலின் போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் எழுந்து நின்று படக்குழுவினரைப் பாராட்டினர், மேலும் படக்குழுவினருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். படக்குழுவினர் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர். 


விமர்சகர்கள், ரசிகர்கள்,  திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் தளத்தில் ஓடிடித் தளத்தில்  பார்க்கக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டுள்ளது.

https://youtu.be/ojATbqdebsg?si=JlnsS1mxIEMAyt55 இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக்...