மூன்றாம் மனிதன் விமர்சனம்:

மூன்றாம் மனிதன் விமர்சனம்: 
பெற்றோர்கள் தவறு செய்தால், குழந்தைகள் பெரும் பேரழிவிற்கு தள்ளப்படுகின்றனர். இதை இயக்குனர் ராம்தேவ் கிரைம் த்ரில்லர் மூலமாக கதையை நகர்த்தி இருக்கிறார்

மூன்றாம் மனிதன் படத்தின் மகத்தான பலம் இயக்குனர் கே பாக்யராஜ் மற்றும் சோனியா அகர்வால். 

தொடக்கத்தில், 12ம் வகுப்பு மாணவன் மாநில முதலிடம் பெற்றதையடுத்து, அவரது பெற்றோர் ஊடகங்கள் முன் அனைவராலும் தெரவிக்கப்படுகின்றனர்.

ராமரும் செல்லம்மாவும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். பணச் சுமையால் ராமர் கடின உழைப்பை மேற்கொண்டு, பணியிடத்தில் ராமர்  குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார், ராமரின் நிம்மதியான வாழ்க்கை இப்போது பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.

இதற்கு இணையாக, சோனியா அகர்வாலின் கணவர் காணாமல் போனதால், போலீசார் விசாரிக்க தொடருகிறது. அந்த விசாரணையில், ரம்யாவின் (சோனியா அகர்வால்) கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவருகிறது. 

பாக்யராஜ் பல கோணத்தில் விசாரிக்கத் தொடங்குகிறார், ரம்யா தனது கணவரின் செயல்பாடுகளை சந்தேகிக்கிறார் இதனால், ரம்யா நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள். ராமரின்  மனைவியுன் நடத்தை சரியில்லை 
என்று ராமர் வருத்தம் படுகிறான். மற்றும் ரம்யாவின் கணவனும் சரியில்லை என்று ரம்யா கவலைப்படுகிறாள்


ஓழுக்கமற்ற வாழ்க்கை   
கெட்டுவிடும் என்பதே மூன்றாம் மனிதன் படத்தின் மைய கதை.

கணவன் மனைவி உறவில், மூன்றாவது நபர் நுழைந்தால், வாழ்க்கை கெட்டுவிடும் என்பதை கூறும் படம் மூன்றாம் மனிதன். ஒரு நல்ல கருத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ்

ராமர் நடிப்பு அப்பாவித்தனமாக
 இருந்தது மற்றும் செல்லம்மாவின்  நடிப்பு யதார்த்தத்தில் இருந்தன. (சிறையில், என் குழந்தையை நான் நல்ல முறையில் வளர்த்திருக்கிறேன் என்று தன் சகோதரனிடம் கூறும் காட்சி அருமை). பாடல்கள் சிறப்பாக இருந்தன, ஆனால் பாடகர் ஒரு ரைம் வாசிப்பது போல் பாடினார் போல் இருந்தது. 

Comments

Popular posts from this blog

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்*

Maasoom Shankar- The Anastasia Steele of south cinema

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '