Thursday, December 14, 2023

*ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!*

*ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!*
*காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் !!*

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். 

தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  

ஆலன் என்பதன் பொருள் படைபாளி.
சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன்,   அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா  நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.  

வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்,  காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R. 

வித்தியாசமானதாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. .. 

எட்டுத்தோட்டாக்கள்  நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் முதலாலன பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

தொழில் நுட்பக்குழு 

தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் - 3S பிக்சர்ஸ் தயாரிப்பு மற்றும் இயக்கம் - சிவா R
இயக்குநர் - சிவா R 
ஒளிப்பதிவு - விந்தன் ஸ்டாலின் 
இசை - மனோஜ் கிருஷ்ணா 
படத்தொகுப்பு - காசிவிஸ்வநாதன்
கலை இயக்குநர் - K.உதயகுமார் 
பாடல்கள் - கார்த்திக் நேத்தா 
ஸ்டண்ட் - மெட்ரோ மகேஷ் 
நடனம் - ராதிகா & தஷ்தா
மக்கள் தொடர்பு - யுவராஜ்

No comments:

Post a Comment

*“Kudumbasthan has a relatable story for audiences” - Actor Manikandan*

https://youtu.be/uqJspATafVk?si=5mVBojkOVsIZslBW It often becomes a normalised situation, where an actor with a commendable movi...