Friday, December 22, 2023

*நடிகர் வெற்றி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !!*

*நடிகர் வெற்றி பிறந்தநாளை,  கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !!*

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர். 
திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி  என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி.  வித்தியாசமான களங்களில்  ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.  
தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க,  மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமாவான  ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர். 
ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  

ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன்,   அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா  நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.  

வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்,  காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.

நடிகர் வெற்றி நாயகனாக நடிக்கும்  இப்படத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தா மதுரா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் முதலாலன பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...