Saturday, January 13, 2024

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் !!

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் !! 
ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள  தருணம் படத்தின் டீசரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்!! 

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  தருணம் திரைப்படத்தின் டீசரை முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். 

வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

மென்மையான இசையுடன் இதயம் வருடும் காதலுடன் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கும் தருணம் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  

தேஜாவு  திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.  திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயரதரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிப்பு முழுதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின், டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 


நடிகர்கள்

கிஷன் தாஸ்
ஸ்மிருதி வெங்கட்
ராஜ் ஐயப்பன்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் - புகழ் & ஈடன் (ZHEN STUDIOS )
எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் - ராஜா பட்டாசார்ஜி
இசை - தர்புகா சிவா
படத்தொகுப்பு - அருள் E சித்தார்த
கலை இயக்குனர் - வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி - Don Ashok, Prabhu
மக்கள் தொடர்பு - சதீஸ், சிவா (AIM)

No comments:

Post a Comment

*“Kudumbasthan has a relatable story for audiences” - Actor Manikandan*

https://youtu.be/uqJspATafVk?si=5mVBojkOVsIZslBW It often becomes a normalised situation, where an actor with a commendable movi...