விரைவில் வார் 2 படப்பிடிப்பு - வேற லெவலில் ரெடியாகும் ஹிரித்திக் ரோஷன்
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் துவங்கும் வார் 2
ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஹிரித்திக் ரோஷன் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் ஆயத்தமாகி வருகிறார். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் வெளியான நிலையில் ஹிரித்திக் ரோஷன் வார் படத்திற்கு தயாராகி வருகிறார்.
சமீபத்திய நேர்காணலில் வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது என்று தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார்.
வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் மூலம் ஹிரித்திக் ரோஷனின் இதுவரை பார்த்திராத கோணத்தை இயக்குனர் அயன் முகர்ஜி வெளிக்கொண்டுவர ஆயத்தமாகி வருகிறார். வார் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ந் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
"மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்து எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். இந்த படம் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment