Tuesday, March 19, 2024

பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !!

‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ 
மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !! 
“சிவா மனசுல சக்தி” படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து,  ரீ ரிலீஸாகும்  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !! 
பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !! 
சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு  வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது.  இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும்,  ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் மார்ச் 22 ஆம் தேதி, இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிகழகம் முழுவதும் வெளியிடுகிறது. 
‘சிவா மனசுல சக்தி’  படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ ரி ரிலீஸ் செய்யப்படுவதில் இயக்குநர்  ராஜேஷ்.M பெரும் உற்சாகத்தில் உள்ளார்.
இயக்குநர்  ராஜேஷ்.M  இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம்  நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது.  மேலும் நடிகர் ஆர்யா திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்தது. 

பல வெற்றிப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரீ ரிலீஸ்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 

தற்போது இயக்குநர் ராஜேஷ்.M,  நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், SCREEN SCENE MEDIA தயாரிப்பில், ‘பிரதர்’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் SRI VARI FILMS ரங்கநாதன் தயாரிப்பில்,  அதர்வா மற்றும் அதிதிசங்கர் நடிக்கும், புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளர். அதற்கான ஆரம்பகட்ட முன் தயாரிப்பு  பணிகளையும் தற்போது செய்துவருகிறார். இந்த சூழலில் தற்போது ரி ரிலீஸாகப்போகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு, ஆவலோடு காத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and scri...