Thursday, March 21, 2024

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் !!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் !! 
 மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது  ( VVVSI ) வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் வேலை வாய்ப்பு, சுயதொழில் வழிகாட்டுதல், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருவது நீங்கள் அறிந்தது. இப்போது மக்கள் செல்வன் 
விஜய்சேதுபதியின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ்  விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED மற்றும் AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD இணைந்து 20-மார்ச் மற்றும் 21- மார்ச் ஆகிய இரண்டு நாட்கள் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர்பகுதியில்  நடைபெற்றது. 
இந்த முகாம் மூலம் 1800 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது , 200 க்கும்  மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் வழங்கினர்.

மேலும் இந்த முகாமில் சென்னை இந்திராகாந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளும் பங்கு பெற்றது , அதன் மூலம்  இரத்ததான உதவியானது பொது மக்கள்  பயன் பெரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கு பெற்று தன்னை இணைத்து கொண்டு குருதி கொடை அளித்த கொடையாளர்கள் , தன்னார்வலர்களுக்கும் & மற்ற உதவியை செய்தவர்களுக்கும்  விஜய்சேதுபதியின்  வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்,  AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD மற்றும் NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED   ஆகியோர் இணைந்து நன்றியை தெரிவித்து கொண்டனர்...

No comments:

Post a Comment

*“மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்*

*“புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார்” ;‘ விஷால் பரவசம்*   *“ரசிகர்களின் அன்புக்கு திருப்பிக்க...