*அக்ஷய் குமார் - டைகர் ஷெராஃப் கூட்டணியில் படே மியன் சோட்டோ மியன் டிரைலர் ரிலீஸ் அப்டேட்*
*பரபர ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படே மியன் சோட்டே மியன் - டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு*
இந்திய திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "படே மியன் சோட்டே மியன்" திரைப்படத்தின் புது அறிவிப்பு வெளியாகி உள்ளது. பூஜா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "படே மியன் சோட்டே மியன்" படத்தின் டிரைலர் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது.
இந்த ஆண்டின் தலைசிறந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் "படே மியன் சோட்டே மியன்" டிரைலர் வெளியீடு தொடர்பான அறிவிப்பு படத்திற்கான ஆவலை தூண்டியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ போஸ்டரில் படே மியன்-ஆக அக்ஷய் குமார் மற்றும் சோட்டே மியன்-ஆக டைகர் ஷெராஃப் மற்றும் மனுஷி சில்லர் மற்றும் ஆல்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
கவர்ச்சிகர கதைக்களம், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், விறுவிறு ஆக்ஷன் காட்சிகளுடன் "படே மியன் சோட்டோ மியன்" திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. பரபர காட்சிகள் அடங்கிய திரைப்படம் என்பதையும் தாண்டி, சென்டிமென்ட் மற்றும் த்ரில்லிங் அனுபவத்தை வழங்கும்.
ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாறன், சோனாக்ஷி சின்ஹா, ஆல்யா மற்றும் மனுஷி சில்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment