*ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா* !!
*ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதி அமைத்து தந்துள்ளனர்* !!
*மக்கள் பணியில் இணைந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா* !
மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர்.
மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பல காலமாக தொடர்ந்து செய்து வருபவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர். அதே போல சமீபமாக பல சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார் சின்னத்திரைப் புகழ் நடிகர் பாலா. இருவரும் இணைந்து தற்போது பள்ளி மாணவர்களுக்காக, உதவிப்பணிகளை செய்துள்ளது பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
KPY பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளியில், பல காலமாக மாணவர்கள் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தர வேண்டுமென்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
KPY பாலா இந்த கழிப்பறை வசதியை மேம்படுத்த உடனடியாக 5 லட்சம் முன்பணம் அளித்தார், மேலும் இந்த கழிப்பறை வசதியை தன்னால் முழுமையாக செய்து தர முடியாதென்பதால், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை அணுகியுள்ளார். உடனடியாக உதவ வந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர், பாலாவை பாராட்டியதுடன், வெகு உற்சாகமாக உதவிப்பணிகளை தானும் இணைந்து செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.
தற்போது பல காலமாக கிடப்பில் இருந்த பள்ளி மாணவர்களுக்கான கழிப்பறை வசதிக்கட்டிடத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் உற்சாகத்துடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலாவைப் பாராட்டி, தங்கள் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment