Saturday, March 2, 2024

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது

பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகிவிட்டது.
செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும்படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத், எடிட்டிங். மேக்அப், பவித்ரா. 
பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மாலை  Film Dude யூடியூப் சேனலில் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ வெளியாகிவிட்டது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

https://youtu.be/TNv3DEUXTuI?si=PHYaxlDt9bq5JtJr

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...