Tuesday, April 30, 2024

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்!

'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர்'


சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

இப்படத்தின் கதை என்ன?

பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று  ஆசைப்படுகிறான்.
ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது .நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.'உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே' என்றார் புத்தர்.'நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களைப் பாதிக்கின்றன' என்கிறது தம்மபதம்.

நாயகனின்  ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான்.

நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே  'ராபர்'படத்தின் கதை.
இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
 'ராபர்' படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஊடகத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறவர்.இவர் ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.
'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார். அதை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலை தளத்தில்  வெளியிட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து 'தாத்தா' என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார் .அந்தப் படம் ஷார்ட் ப்ளிக்ஸ் சேனலில் விரைவில் வெளியாக உள்ளது.
தயாரிப்பாளர் கவிதா 'ராபர்' படம் பற்றிப் பேசும்போது,

"உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.

'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.
இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.
நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.

இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
மே மாதத்தின் இறுதியில்  ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம்.அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.

இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
 இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.

அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை
அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

இவ்வாறு ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி இயக்கி உள்ளார்.

கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ROBBER - CAST AND CREW DETAILS :-

STARRING - SATHYA | DANI POPE | DEEPA SHANKAR | JAYAPRAKASH | 
SENDRAYAN | NISHANTH | RAJA RANI PANDIYAN

DIRECTOR - SM PANDI

STORY - ANANDA KRISHNAN

SCREENPLAY & DIALOGUE - ANANDA KRISHNAN | SM PANDI

MUSIC - JOHAN SHEVANESH

CINEMATOGRAPHER - NS UTHAYA KUMAR

EDITOR - SRIKANTH NB

ART - PPS VIJAY SARAVANAN MFA

STUNT - C MAHESH

Pro..Thirai nidhi selvam

PRODUCER - 
KAVITHA S (IMPRESS FILMS) 
ANANDA KRISHNAN (METRO PRODUCTIONS)

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!  

 
‘Golden studios’  சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம்  தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன்  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப்  உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 

தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது… 
இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த  வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம்.   எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.  உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.  
நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது… 
நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு.  ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே  இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா.  டான்ஸ் மாஸ்டர் சாந்தி,  ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி,  என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது...
வாழ்த்த வந்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார். டிரெய்லர் பார்த்தேன், எந்த குறையும் இல்லாமல் மிக நன்றாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். இன்று சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை வெளியீடு வரை இவர்கள் கொண்டு வந்ததே மிகப்பெரிய சாதனை. இந்தப்படம் வெற்றி பெற்றால், இன்னும் பல சிறு முதலீட்டுப் படங்கள் வரும். அதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இசையமைப்பாளர் தீபக் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார்  பேசியதாவது...
படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா.  மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என  எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை  மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது...
இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல  வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும், வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள்,  பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்த மேடையை மிக உணர்வுப்பூர்வமான மேடையாகப் பார்க்கிறேன். பேசுபவர்கள் அனைவரும் முழு மனதோடு வாழ்த்திப் பேசுகிறார்கள் அதற்குக் காரணம் ராதிகா மாஸ்டர் தான். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அன்பை மட்டுமே பரப்பியிருக்கிறார். அந்த அன்பு தான் இங்கு பிரதிபலிக்கிறது. பெண்களின் ஆசை நிறைவேறத் துணையாய் நிற்பது தான் சிறந்த ஆணின் பண்பு ஆகும். அது போல் தான் ராதிகா மாஸ்டரின் கணவர் இருக்கிறார். ராதிகா மாண்டரின் போராட்டம் எனக்குத் தெரியும் அவரின் விடாமுயற்சி தான் அவரை இன்று இயக்குநராக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு எனும் களத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது.   ராதிகா மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 

நடிகர் மைம் கோபி  பேசியதாவது…
ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன். ராதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள்.  தம்பி தீபக்கிற்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

நடிகர் சந்தோஷ் பிரதாப்  பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன்.  அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்குள்ள அனைவருடனும் நான் ஒரு வகையில் வேலை பார்த்துள்ளேன். மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 

நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி  பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.  தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவர் இன்னும் பெரிய வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்.  

நடிகை இந்திரஜா சங்கர் பேசியதாவது…
எல்லா பெரியவர்களுக்கும் என் நன்றிகள். ராதிகா மாஸ்டருக்கு என் நன்றிகள். கல்யாணத்திற்குப் பிறகு நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. ராதிகா மாஸ்டரின் முதல் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி.  தன்ஷிகா மேடத்திற்கு நன்றி, என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது…
இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே  கிளம்புவதைப் பார்த்துள்ளேன்,  இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்.  தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இங்கு வாழ்த்த  வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். எல்லோருக்கும் நன்றிகள். 

நாயகன் ருத்விக் பேசியதாவது…
சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம்,  நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப்  பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும்  கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள்,  நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான்  போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம்  முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன்  நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.   

இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி. 

இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த  மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார்.  இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில்  அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர்.  படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது!!

ப்ளாக்பஸ்டர்  ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’  திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது!! 
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின்  சர்வைவல் த்ரில்லரான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.

ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான  திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய  மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிஎஸ்கே வீரர்களுடன் 'தல' எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், ​​ அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான்  மஞ்சும்மேல் பாய்ஸ் படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.

சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வரும் மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Monday, April 29, 2024

*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!*

*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!*
*ரீல் குட் பிலிம்ஸின் 'எலக்சன்' மே 17 ஆம் தேதி வெளியாகிறது!*

'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ 
'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'எலக்சன்' தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தின்  வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌ அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை  தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (29.04.2024) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் திரு.நாசர் அவர்கள் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரபடுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம்.

பத்திரிகை செய்தி
இன்று (29.04.2024) தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் திரு.நாசர் அவர்கள் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரபடுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களிடமும், காவல் ஆய்வாளர், சைபர்க்ரைம், பரங்கிமலை அவர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டு அந்த விஷகிருமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த விசாரணை நடைப்பெற்றுவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அந்த உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்பவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

At the Skill Bridge Conclave 2024,Chairman of Agni Group of Companies R.N. Jayaprakash said that the quality engineering education provided in Tamil Nadu is the main reason for the development of the major cities of South India and Global companies are looking for Tamil Nadu.

At the Skill Bridge Conclave 2024,Chairman of Agni Group of Companies R.N. Jayaprakash said that the quality engineering education provided in Tamil Nadu is the main reason for the development of the major cities of South India and Global companies are looking for Tamil Nadu. 
More than 200 HR Professionals & Industry experts participated in the program to bridge the gap between academia and industry participated in Skill Bridge Conclave 2024 organized by AGNI College of Technology hosted the much-anticipated event at the  WelcomeHotel by ITC Hotels. The event aims to underscore the pivotal role of work integrated learning and foster closer collaborations between academia and industry.

Mr.R. N. Jayaprakash, Chairman, Agni Group of Companies,Mrs.Bhawani Jay Prakash Chairperson,Prof T S Natarajan, Advisor (former IIT Madras Professor), Dr. Vijayakumar, COO, Garuda Aerospace & Dr. Srinivasan Alavandar, Principal, Agni College of Technology  graced the event and expressed their valuable inputs to the HRD experts.

Central to the SKILLBRIDGE event is the imperative to bridge the gap between academic knowledge and industry practices. AGNI College of Technology, recently bestowed with autonomous status by Anna University, is spearheading efforts to revamp its curriculum to align closely with the evolving needs of various industries. This includes the development of innovative Work Integrated Learning (WIL) programs designed to seamlessly integrate theoretical learning with practical, real-world experiences.

The event will serve as a platform for stakeholders from industry, and professional bodies to engage in meaningful discussions and collaborations. Through interactive sessions and panel discussions, participants will explore strategies to ensure that educational curricula remain abreast of current industry trends and demands.

Mr.R.N JayaPrakash ,Chairman  of AGNI group of companies  expressed enthusiasm for the event, stating, "SKILLBRIDGE represents a significant milestone in our ongoing efforts to nurture industry-ready graduates. By forging strong partnerships with businesses, organizations, and professionals, we aim to equip our students with the requisite skills and knowledge to thrive in today's dynamic workforce."

Dr. T. Natrajan, in his address, underscored the significance of Work Integrated Learning (WIL) and its uniqueness in bridging the gap between academia and industry, emphasizing its role in providing students with practical, real-world experiences to enhance their employability and readiness for the workforce.

Dr. Srinivasan Alavandar, Principal of Agni College of Technology, elucidated on Work Integrated Learning (WIL) and outlined AGNI's pioneering approach in its implementation, emphasizing the institution's commitment to shaping the future by seamlessly integrating academic learning with practical industry experience for students.

Key highlights of the SKILLBRIDGE event include:

Curriculum Innovation: AGNI College of Technology's commitment to curriculum enhancement, with a focus on integrating WIL programs to enhance students' employability and industry readiness.
Industry-Academia Collaboration: Facilitating dialogue and collaboration between academia and industry leaders to ensure that educational programs remain relevant and responsive to industry needs.
Practical Insights: Providing attendees with practical insights into effective strategies for aligning academic learning with the demands of the ever-evolving job market.

Networking Opportunities: Offering participants the chance to network with industry professionals, potential employers, and fellow educators to foster collaborations and exchange best practices.
The SKILLBRIDGE event promises to be a catalyst for transformative change in the realm of higher education, paving the way for innovative approaches to preparing future generations of professionals for success in an increasingly competitive global landscape.

Industry experts from leading software companies such as TCS, Wipro, Capgemini, Hexaware, etc and core companies including Brakes India, India Cements, Caterpillar, Ford etc participated in the event, offering valuable insights on Work Integrated Learning (WIL) and its implementation, enriching discussions on bridging the academia-industry gap.

*'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!*

*'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி  அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!*
திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும்,  யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வசனங்கள் சமூகவலைதளங்களிலும் வைரலானது. 
 

இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இன்று வெளியாகியுள்ள புதிய டிரெய்லரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் கார்த்தி, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட திரையுலகில் உள்ள 6 முக்கிய நட்சத்திரங்களை இந்த டிரெய்லர் உடனடியாகக் கவர்ந்தது. 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, பி. சக்திவேலன் தனித்துவமான நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து விநியோகம் செய்து முன்னணி விநியோகஸ்தராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் விநியோகிக்கும் படங்கள்  திரைப்பட ஆர்வலர்களுக்கு விருந்தாகவும் வர்த்தக வட்டாரங்களுக்கு லாபம் தருவதாகவும் உள்ளது. அவர் இப்போது ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’ படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யவுள்ளார். 
 
இயக்குநர் சாந்தகுமார் கூறும்போது, ”கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். ஒட்டு மொத்த படக்குழுவினரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து, மே 10 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உதவிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி.சக்திவேலன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். கொடைக்கானலில் நிகழ்கால கதை நடக்கும். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளை படம் கடந்து செல்கிறது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் எஸ்.எஸ்.தமன் (இசை), சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் (ஒளிப்பதிவு), வி.ஜே. சாபு ஜோசப் (எடிட்டிங்), சதீஷ் கிருஷ்ணன் (நடன அமைப்பு). சிவராஜ் (கலை), சேது (ஒலி எஃபெக்ட்ஸ்), எஸ் பிரேம் (நிர்வாகத் தயாரிப்பாளர்), யுகபாரதி (பாடல் வரிகள்), தபஸ் நாயக் (ஒலிக்கலவை), எம்.எஸ்.ஜெய சுதா (உரையாடல் பதிவாளர்), ஆக்‌ஷன் பிரகாஷ் (ஸ்டன்ட்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), ஆனந்த் (ஸ்டில்ஸ்) மற்றும் பெருமாள் செல்வம், மற்றும் மினுசித்ராங்கனி. ஜே (ஆடைகள்).

*தூய்மை பணியாளர்களுக்கு விடியல் எப்போது ? ; குமுறும் ‘நாற்கரப்போர்’ இயக்குநர் ஸ்ரீ வெற்றி*

*தூய்மை பணியாளர்களுக்கு விடியல் எப்போது ? ; குமுறும் ‘நாற்கரப்போர்’ இயக்குநர் ஸ்ரீ வெற்றி*
*”ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும்” ; ‘நாற்கரப்போர்’ இயக்குநர் ஸ்ரீ வெற்றி ஆவேசம்* 

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.

இந்தநிலையில் தூய்மை பணியாளர்களின் அவல நிலையையும், அவர்களது நலன் குறித்த அரசின் பாராமுகத்தையும் குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் ஸ்ரீ வெற்றி  ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும் என்கிற  தனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார் 

இதுகுறித்து அவர் கூறும்போது, “அரசியல், உயர்சாதி, பணம், விளையாட்டு என்கிற வெள்ளை காய்களுக்கும் ஏமாளிகளான மக்கள், ஒடுக்கப்படுபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியால் இழிவு படுத்தப்படுபவர்கள் என்கிற கருப்பு காய்களுக்கும்  காலங்காலமாக பல நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நடந்து வரும் ஒரு சதுரங்க வேட்டை தான் தான் ‘நாற்கரப்போர்’.

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு  தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை இன்றும் இந்தியா முழுவதும் இருப்பது வேதனை அளிக்கிறது. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கவோ, உருவாக்கியதை வெளிநாடுகளில் இருந்து வாங்கவோ மனமில்லை என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றுவது சாதியின் பேரால் சிலருக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதில் ஆதிக்க சக்திகள் உறுதியாக இருக்கின்றன. 

2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவெங்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தனைக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பும், உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்கிற சட்டம் காகிதத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இதுவரையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
ஒவ்வொரு திருநாளையும், திருவிழாக்களையும், மாநாடுகளையும், நடத்தி கொண்டாடிவிட்டு எதோ சாதித்த மனநிலையில் மகிழ்கிறோம். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குப்பின் தூய்மை பணியாளர்களின் வலி எவ்வளவு கொடியது என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க  முடியாது. பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களின் வேலை எப்படியாவது நிரந்தரமாக்கப்படும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் புயல், வெள்ளம், மழை, பேரிடர் காலங்களிலும், சென்னை கடலில் எண்ணெய் கொட்டியபோதும், உயிரை பறிக்கும் கொரோனா காலகட்டங்களிலும் ஓடி ஓடி உழைத்து, இன்று வரை எந்நேரமும் இந்தியா முழுவதும் மனிதர்களின்  கழிவுகளை அவர்கள் சுத்தம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் அத்தொழிலாளர்கள் மீது அதிகரிக்கும் அடக்குமுறைகளும், சமூக அவலங்களும், சாதிய வன்ம திணிப்புகளும், பொருளாதார சூழ்நிலைகளும் அவர்களது மூளையை நெறிக்கும் போது, அச்சமூகத்தின் ஒட்டு மொத்த  கைகளும் ஒண்றினைந்து அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும்.

ஒரு குற்ற உணர்வோடும், கையாலாகாத நிலையோடும் இந்த சமுதாயத்தில் இருந்த நான் பலருடைய தொடக்கத்துக்கு இடைப் பத்தியாக நாற்கரப்போரில் நின்று நகர்வடைகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது மாறுதலுக்கான நேரம்” என்று கூறியுள்ளார்.

Sunday, April 28, 2024

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்: சுவையும், பாரம்பரியமும் கலந்த உணர்ச்சிகரமான பயணத்தில் முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு!

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்: 
சுவையும், பாரம்பரியமும் கலந்த உணர்ச்சிகரமான பயணத்தில் 
முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு! 
 
வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளது பெருவிருப்பமாக இருக்கும்.  மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில் பங்கேற்கும் முதன்மையான 12 போட்டியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த சுவையான நிகழ்ச்சி ஒரு முக்கிய தருணத்தை எட்டியிருக்கிறது. 
 
இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான செய்முறையை ஒரு தனிச்சிறப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் ஆக்கியிருப்பது நடுவர்களால் தரப்படும் ஃபிளிப் தி போர்டு என்ற ஒரு தனித்துவமான சவாலாகும்.  தங்களது தோற்றத்தையே கண்ணாடி பிரதிபலிப்பில் பார்க்குமாறு இந்த சமையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  தங்களது வெட்டுப்பலகையை திருப்பும்போது அவர்களது தோற்றத்தையே அவர்கள் பார்க்க நேர்ந்தது.  ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் அவர்கள் தொடங்கிய இந்த பயணத்தின் ஒரு நினைவூட்டலாக இது அமைந்தது.  அவர்களது சமையல் திறன்களை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி, ஒரு தனி நபராக அவர்களது ஆளுமையின் சாரத்தையும் வெளிப்படுத்துகின்ற ஒரு உணவை நேர்த்தியாக உருவாக்குவதே அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலாகும்.  
 
அவர்களது அடையாளத்தையும், ஆளுமையையும் நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் உணவுகளை (டிஷ்) உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட திறன்மிக்க 18 போட்டியாளர்களில் எஞ்சியவர்களை விட ஒருவரது பெயர் தனித்துவமானதாக ஒளிவீசி பிரகாசித்தது.  பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு சிறப்பான பெண்மணியான கவிதா என்ற அன்னையே அவர்.  அந்த பெண்மணி சமைத்த உணவுப்பொருள் என்ன? அது வெறுமனே ஒரு உணவு மட்டுமல்ல.  அவரது குழந்தைகள் மீது அவர் கொண்டிருக்கும் அன்பு மற்றும் பாசத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடாக அது இருந்தது. 
 
மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் கிச்சன் நிகழ்ச்சியில் தனது தொடக்கம் குறித்து பேசிய திருமதி. கவிதா, “மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெறுவதில் நான் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறேன்.  தனது குழந்தையுடன் மீண்டும் நான் இணைவதற்கு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை வழங்கும் ஒரு நிகழ்வாக இந்த ரியாலிட்டி ஷோ இருக்கிறது.  நான் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் வெறும் சேர்க்கைப்பொருட்களை மட்டும் நான் கலப்பதில்லை.  எனது வாழ்க்கை கதையை, எனது அன்பை மற்றும் எனது கனவுகளையும் அதனோடு கலந்தே அவற்றை உருவாக்குகிறேன்.  குழந்தையிடமிருந்து பிரிந்திருக்கும் ஒரு அன்னையாக எனது மகன் மீது நான் கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்பையும், எனது தேடலையும், எனது பலத்தையும் நான் சமைக்கும் உணவில் ஒவ்வொரு சுவையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  எனது மகன் ஹரிபிரதீஷ் ஜெயந்த் – க்கு மிகவும் பிடித்தமான வெள்ளரிக்காய் பிஸ்கட்டையும் மற்றும் வெள்ளரிக்காய் சாலட்டையும் கடாய் கிரேவியோடு தயாரித்து நடுவர்கள் முன்பு வழங்கியபோது அது வெறும் உணவுப்பொருளாக மட்டும் இருக்கவில்லை; ஒரு தட்டின் மீது வைக்கப்பட்ட எனது இதயமாகவே அது இருந்தது.  அந்த உணர்வுதான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  அனைத்து சவால்களையும், சமையலறையிலும் கூட உண்மையான அன்பு வெற்றி கொள்ளும் என்பதை அது நிரூபிக்கிறது.” என்று கூறினார். 
 
போட்டி மேலும் சூடுபிடிக்கையில், சமையல் கனவுகள் சிறகு விரித்து பறக்கின்றபோது மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சி அதன் முதன்மையான 12 இல்ல சமையற் கலைஞர்களை பெருமையுடன் வரவேற்கிறது.  அவர்களது தனித்துவமான சுவைகள், கதைகள் மற்றும் ஆர்வங்களை தாங்கள் தயாரிக்கும் உணவுகளை நேர்த்தியாக வெளிப்படுத்துமாறு அழைக்கிறது.  மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக விருதை வென்று புகழின் உச்சியை எட்டுகின்ற இந்த சுவையான பயணத்தில் அவர்கள் விடாமுயற்சியோடு பயணிக்கும் பயணத்தில் அதை கண்டு ரசிக்க தவறாமல் இணைந்திடுங்கள்.  
 
திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்கு சோனி லைவ் அலைவரிசையில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியை கண்டு ரசியுங்கள்.

*Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024*

*Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024*
This year's highly-anticipated sci-fi spectacle, Kalki 2898 AD, is set to win over the audiences worldwide on 27th June, 2024. With the biggest casting coup including the stalwarts of the Indian film industry such as Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone, and Disha Patani in pivotal roles, the film has garnered immense attention and kept fans eagerly awaiting its release.

The announcement, made today, precisely two months ahead of the release date, has only added to the excitement surrounding the project. Taking to social media, the makers unveiled the biggest news which read

https://x.com/vyjayanthifilms/status/1784189849282761177?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

A recent glimpse into the world of Kalki 2898 AD through Amitabh Bachchan's character as Ashwatthama left fans in awe, particularly with the stunning de-aging transformation of the legendary actor. The character reveal video, a true pan-India teaser, showcased a blend of languages including Tamil, Telugu, Malayalam, Kannada, and English.

Directed by Nag Ashwin, Kalki 2898 AD is set to be a biggest cinematic event of the year. With an incredible cast and backed by Vyjayanthi Movies, it's gearing up for its release on 27th June, 2024.

Saturday, April 27, 2024

*கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்*

*கவின்+யுவன்+ இளன் கூட்டணியின்  இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்*
'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 
'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பி. ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, 'ஸ்டார்' எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌ இதனால் எதிர்வரும் மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

https://youtu.be/5QlTZEogGrE

Friday, April 26, 2024

Oru Nodi Movie Review: Unexpected scenario leads to a turning point.

Oru Nodi Movie Review: Unexpected scenario leads to a turning point.  

"Oru Nodi," directed by Manivarman and produced by Alaghar Movies and White Lamp Pictures, Taman Kumar in a prominent role alongside auxiliary artists such as MS Bhaskar, Vela Ramamurthy, Pala Karuppaiah, and Sriranjani. The story begins with Sankunthala filing a complaint against Karimedu Thiyagu for her husband's disappearance, Inspector Paruthi Ilamaaran involving into the investigation. As he delves deeper, the case intertwines with the mysterious murder of a young woman, leading to a complex narrative that explores themes of betrayal and desperation.
The director skillfully connects the missing person case with the murder mystery, crafting a cohesive storyline that keeps the audience engaged. With Ratheesh's cinematography and Manickam's music, "Oru Nodi" promises a visually stunning and emotionally resonant experience. Taman Kumar's portrayal of Inspector Paruthi Ilamaaran is notable for its audacious voice and compelling presence, drawing viewers further into the unfolding drama.
Unlike typical films, "Oru Nodi" opts out of cinematic clichés like romantic songs and unnecessary fight scenes, allowing the focus to remain on the core plot and character development, which highlights the film's dedication to storytelling and its commitment to delivering a genuine and impactful narrative. Overall, "Oru Nodi" offers a compelling blend of thriller, drama, and mystery, promising to captivate audiences with its gripping storyline and exceptional performances.

Thursday, April 25, 2024

*”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!*

*”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!*

ES Production & Macha Swag Dance  தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ்  இசையில், எழில்வாணன் வடிவமைத்து   உருவாக்கியிருக்கும்  ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா &  ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி  & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர். 

இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர் 


*இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது....*

 இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு  பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம். இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.  நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள்.எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்... அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி...

இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன் அவர்  உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது  மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


*நடிகை ரவீனா பேசியதாவது*

 எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள்  நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.  எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார். சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில்  நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி.  இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  


நடிப்பு : எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா

கருத்து, பாடல் மற்றும் இயக்கம் - எழில்வாணன் EV

இசை: தீபன் மற்றும் வைபவ்

நடன அமைப்பு: மான்சி  & எழில்வாணன் EV

எடிட்டர்: கலைவாணன் (SK21 எடிட்டர்)

தயாரிப்பு - ES Production & Macha Swag Dance

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள்

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது…
ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் வேலைப் பார்த்த போது அவர் எனக்குச் சீனியர். அவர்ப் பயங்கர ஸ்ட்ரிக்ட். மிகப்பெரிய திறமைசாலி அவருக்குச் சரியான ஹீரோவாக அருண் விஜய் கிடைத்துள்ளார். இந்த டைட்டில் மிரட்டலான டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சார் வைத்திருந்த டைட்டில். படம் மிகப்பெரிய வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.
நடிகர் விஜயகுமார் பேசியதாவது…
பாபி பாலச்சந்திரன் மிக எளிய குடும்பத்தில் பிறந்து இத்தனை உயரம் எட்டியுள்ளார். உழைப்பு, நம்பிக்கை, நேர்மை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். டாக்டர் மனோஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ரெட்ட தல மிகச்சிறந்த டைட்டில். வெற்றிகரமான டைட்டில். திருக்குமரன் மிகப்பெரிய திறமைசாலி, கடுமையாக உழைத்து நல்ல திரைக்கதை உருவாக்கி, இந்தப்படம் செய்கிறார். இரண்டு குயின் இருக்கிறார்கள். படத்தில் உழைக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர்க் கிரிஷ் திருக்குமரன் பேசியதாவது…
இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கனும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார். இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது, அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இது தான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார். இந்தப்படம் ஒரு குழுவாக உருவாக்கும் படம் பாபி சார், மனோஜ் சார் மட்டுமல்லப் பிடிஜி என்பது எங்களையெல்லாம் இணைத்த ஒரு பெரிய குழு. தான்யா, சித்தி இத்னானி அழகாக நடிக்கிறார்கள். அருண் விஜய் சார் ஆச்சர்யம் தந்துகொண்டே இருக்கிறார். படத்திற்காகப் பயங்கரமாக உழைக்கிறார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் அருண்விஜய் பேசியதாவது…
பாபி சார் மனோஜ் சார்ப் பற்றி எல்லோரும் பேசினார்கள். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகள் கேட்டிருக்கிறேன், நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன். திருக்குமரன் இந்தக்கதைச் சொல்லி, ரெட்ட தல என்று சொன்ன போது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். சித்தி, தான்யா, ஆண்டனி சார், கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது. சாம் சி எஸ் உடன் ஏற்கனவே வேலைப் பார்த்துள்ளேன். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில்,  அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார். 
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.   

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.  டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர்.  அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

Wednesday, April 24, 2024

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !!

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !! 
சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான  ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். 

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Tuesday, April 23, 2024

*On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!*

*On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!*
The Visionary Prasanth Varma has become a household name across the country after the Pan India sensation Hanu-Man. The creative director is bringing us another Epic Adventure from The Prasanth Varma Cinematic Universe (PVCU). The film titled Jai Hanuman is a sequel to Hnau-Man which was announced towards the end of the prequel. The script was already locked and the movie will be crafted on a big canvas. The movie will feature a stellar cast and popular craftsmen will be part of it.

The director who started the pre-production works of the movie on the momentous day of the inauguration of the Ayodhya Ram Temple has come up with a new poster for the Hanuman Jayanthi occasion. The poster sees Lord Hanuman standing valiantly on the cliff with a mace in hand, even though the dragon that is approaching him breathing fire. Prasanth Varma is bringing Dragons to the Indian screen for the first time. The poster gives hints about the kind of experience we are going to get with top-end VFX and other technicalities.

The movie Jai Hanuman will be released on IMAX 3D. The other details of this magnum opus are awaited.

Today, the team will be celebrating 100 days event of Hanu-Man.

*மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு‘*

*மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு‘*
*அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு*
ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. 

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். 
இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது

‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி. மேலும் அமீர் படம் வந்து நீண்ட நாட்கள் ஆவதால் அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் நூறு சதவீதம் கனெக்டாகும் என நினைக்கிறேன். 

இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம். காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார். வித்யாசாகரின் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் இது இயக்குநராக,தயாரிப்பாளராக என்னுடைய கேரண்டி” என நம்பிக்கையுடன் கூறினார்.

*Shruti Hassan's recently released track 'Inimel' crosses 10 Million views on YouTube*

*Shruti Hassan's recently released track 'Inimel' crosses 10 Million views on YouTube*
*The track was produced by Kamal Haasan's Raaj Kamal Film Internationals and also marked the acting debut of director Lokesh Kanagaraj*
Actress and Musician Shruti Haasan is currently riding high on the success of her recently released track 'Inimel' which has now crossed over 10 million views on YouTube. The song which released on 25th March, have been receiving appreciation from all quarters
for its relatable storyline, beautiful composition and heartwarming performances by Shruti and Lokesh.

The track had grabbed a lot of attention since the announcement of the project itself. ‘Inimel', which means From Now On, is a song that portrays all the stages of love in a modern urban relationship with all its ebbs and flows. The song perfectly captures the dynamics of a contemporary romance which is struck a chord with the audiences.

On film front, Shruti will be next seen in 'Dacoit' starring Adivi Sesh. Her international film 'The Eye' is also expected to release this year.

*Song Link -* https://youtu.be/IIat8oxEIbE?si=1HZYgx80waBOG2oT

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...