இன்று (29.04.2024) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் திரு.நாசர் அவர்கள் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரபடுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம்.
பத்திரிகை செய்தி
இன்று (29.04.2024) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் திரு.நாசர் அவர்கள் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரபடுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களிடமும், காவல் ஆய்வாளர், சைபர்க்ரைம், பரங்கிமலை அவர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டு அந்த விஷகிருமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த விசாரணை நடைப்பெற்றுவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அந்த உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்பவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
Comments
Post a Comment