"*நெவர் எஸ்கேப்" பட இசை. வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு* !!
Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் "நெவர் எஸ்கேப்". விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் ஆல்பர்ட் பேசியதாவது…
சினிமாவிற்கு இப்போது தான் அறிமுகமாகியுள்ளேன். இந்தப்படம் ஆரம்பித்த போது மொத்த டீமுக்கும் 25 வயது கூட நிரம்பவில்லை, ஆனால் 50 வயது ஆனவர்களுக்கு இருக்கும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது. இவர்கள் சொன்ன கதையே படு வித்தியாசமாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோரும் நண்பர்கள். படத்தை வித்தியாசமாக தந்துள்ளார்கள். ராபர்ட் மாஸ்டர் அருமையான நடிப்பைத் தந்துள்ளார். இப்படம் ஹாரர், சைக்கோ, மிஸ்டரி மூன்றும் கலந்து வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும். இப்படத்திற்காக புதுமையான ஒரு விசயத்தை செய்துள்ளோம். படத்தை திரையரங்கில் பார்ப்பவர்கள், எங்களின் 10 கேள்விகளுக்குப் பதிலளித்தால், பதிலளித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் பரிசு தரவுள்ளோம். என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.
சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செழியன் பேசியதாவது…
படத்தின் தலைப்பிலேயே கவர்ந்து விட்டார்கள். நெவர் எஸ்கேப். தவறு செய்தால் அவர்கள் நெவர் எஸ்கேப் அது தான் கதை என்றார் தயாரிப்பாளர். சுவாரஸ்யமான கதையை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் சொன்ன 1 லட்சம் பரிசு, நல்ல ஐடியா! அதை நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செய்வதாக இருந்தோம், ஆனால் இவர் முந்திக்கொண்டார். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் பேசியதாவது…
யூடுயூப் வீடியோவிலிருந்து நிறைய பேர் சினிமாவிற்கு வந்துள்ளார்கள் ஆனால் ஒரு டெக்னீஷீயன் என்ற வகையில் நான் தான் முதல் ஆள். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இனி. வீட்டில் என்னை நம்புவார்கள். யூடுயூபிலிருந்து வரும் போது நிறைய தயக்கம் இருந்தது. ஏனென்றால் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, நிறைய அனுபவம் தேவை. நாங்கள் அனைவரும் நண்பர்கள். அதனால் தயக்கம் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. அனைவரும் ஒன்றாக இணைந்து படத்திற்காக உழைத்திருக்கிறோம். ராபர்ட் மாஸ்டரை வைத்து ஒரு பாடல் எடுத்தோம் நல்ல அனுபவம். படம் உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது..
எனக்கு இப்படம் தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் என்னுடைய முதல் ஹாரர் படம், ஆதரவு தாருங்கள் நன்றி.
நாயகன் பிரித்வி பேசியதாவது…
நாஞ்சில் நளினி அவர்களின் பேரன் நான். என்னுடைய முதல் படம் கம்பெனி. அந்தப்படத்தில் நடித்ததைப் பார்த்து, இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ஆல்பர்ட் சாருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மிக மகிழ்ச்சியோடு வேலைபார்த்த படம் மிக நன்றாக வந்துள்ளது. ராபர்ட் மாஸ்டர் நிறைய சொல்லித்தந்தார். படத்தின் இயக்குநர் திறமையானவர், மிக சூப்பரான திரைக்கதை, கண்டிப்பாக உங்களுக்கு படம் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அரவிந்த் ராஜ் பேசியதாவது..
இது தான் என் முதல் மேடை. தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. இந்தப்படத்திற்காக நிறைய தயாரிப்பாளர்களை அணுகினோம். இறுதியில் ஆல்பர்ட் சார் கதை கேட்டவுடனே ஒத்துக்கொண்டார். இப்படம் ஒரு வித்தியாசமான ஹாரர் திரில்லர், ஹாரரில் காமெடி, மிஸ்டரி என நிறைய கதைகள் வருகிறது ஆனால் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் என் நண்பர்கள், படத்தில் ஒன்றாக இணைந்து உழைத்துள்ளோம். ராபர்ட் மாஸ்டர் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்துள்ளார். மிக நல்ல வேடம் செய்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் உவைஸ் கான் பேசியதாவது…
இது எனக்கு முதல் படம், வாய்ப்பு தந்த ஆல்பர்ட் சார், இயக்குநர் அரவிந்திற்கு நன்றி. ராபர்ட் மாஸ்டர் உடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. மிக சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். எல்லோரும் புதுமுகங்கள், உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை ஹர்ஷினி பேசியதாவது…
என்னோட டீமுக்கு முதல் நன்றி. இப்படத்தை எடுத்துக் கொண்டு வர தயாரிபபாளர், இயக்குநர், ராபர்ட் மாஸ்டர் என அனைவரும் உழைத்துள்ளனர். ஒன்றரை வருடமாக பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இளைஞர்கள் மிக திறமையானவர்கள், எனக்கு முதல் படம் தான் எனக்கு எல்லாம் சொல்லித்தந்து நன்றாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு நல்ல படம். ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர், நடன இயக்குநர் ராபர்ட் பேசியதாவது…
இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள் நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் பர்மிசன் வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.
ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க நினைத்து வேறொரு ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் 7 நண்பர்கள், அங்கு அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் படத்தின் மையம்.
பல பிரபல யூடுயூப் வீடியோ சீரிஸ்களில் பணியாற்றியுள்ள இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ், ரசிகனைச் சிந்திக்க வைக்கும் வகையில், அடுத்தடுத்த ஆச்சரியங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் புதுமையான திரைக்கதையில், ஒரு முழுமையான ஹாரர் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் .
இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி J சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக சென்னை வேலூர் பகுதியை ஒட்டிய ஆரணியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான வகையில் இப்படத்தின் மூன்று பாடல்களில் ஒரு பாடல், முழுக்க ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். அம்முச்சி முதலான பல நக்கலைட்ஸ் சீரிஸ்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் குமார் SJ இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
*தொழில் நுட்ப குழு விபரம்*
எழுத்து இயக்கம் - டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ்
ஒளிப்பதிவு - சந்தோஷ் குமார் SJ
எடிட்டர் - குரு பிரதீப்
இசை - சரண் குமார்
கலை இயக்குனர் - முத்து
மக்கள் தொடர்பு - பரணி அழகிரி, திரு முருகன்.
No comments:
Post a Comment