Saturday, April 20, 2024

*பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!*

*பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!*  
Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன  நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.  

நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு புள்ளி,  என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB. 

தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்  இரத்தம் பாயும் கரும்  சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பாத்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.   பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் லுக்கும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான தோற்றத்தில் மிரட்டுகிறது.  வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 

இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி,  ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

நான்கு  கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங்க் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி  அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை  என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின்  டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

தொழில் நுட்ப குழு 

எழுத்து  இயக்கம் – பிரிட்டோ JB
ஒளிப்பதிவாளர் - மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா
இசையமைப்பாளர் - தேவ் பிரகாஷ்
கலை – ராம் , தினேஷ், சுபேந்தர்
எடிட்டர் – தமிழ் அரசன்
ஸ்டண்ட் இயக்குனர் - ராக் பிரபு
ஒலி வடிவமைப்பு - சுகுமார் MPSE, ஸ்ரீகம்த் சுந்தர் MPSE,  ( The Soundables)
ஆடை வடிவமைப்பாளர் - ஸ்ரீதேவி, ரெபேக்கா, ஜீவா
நடன இயக்குனர் - சாண்டி
ஒப்பனை – கோலப்பன்
பாடல் வரிகள் - A.S தாவூத், அக்ஷரா பாலகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பாளர் - ஃபாக்ஸ் ஐ
மக்கள் தொடர்பு  - யுவராஜ்
இணை இயக்குநர் - மெல்பர்ட்
கலரிஸ்ட் - கௌஷிக்
வி எஃப் எக்ஸ் – அதிதியா
தயாரிப்பு மேலாளர் - செல்வம் இளையராஜா
தயாரிப்பு -Signature Productionz மற்றும் GS Cinema International

No comments:

Post a Comment

Zee Studios & Parallel Universe Pictures’ “Kingston” Teaser Release - Actor Dhanush unveils G.V. Prakash Kumar’s ‘Kingston’ Teaser. Kingston Worldwide Theatrical Release on March 7, 2025

The much-awaited teaser of ‘Kingston’, featuring Tamil film industry’s leading music director and actor G.V. Prakash Kumar, has been unveile...