Wednesday, April 17, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்' !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்' !! 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!! 


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டுள்ளது.

“உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில்,  நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸுக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், குறிப்பாக தற்காலத்திய இளைஞர்களிடமிருந்து அபரிமிதமான அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது. 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

No comments:

Post a Comment

Vanagaan Movie Review: A Tale of Silent Strength

Vanagaan Movie Review: A Tale of Silent Strength Vanangaan, directed by the visionary Bala, is a gripping drama that masterfully combines e...