Tuesday, April 2, 2024

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில்,  “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!
புதுமையான வடிவத்தில் அசத்தும்   “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள  திரைப்படம்  “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி  மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ்,  திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக  பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  
இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ். 
படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான முறையில் உருவாகியுள்ள  இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ்  முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க, குளிர் பொங்கும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை, திரையரங்கில் சொட்டச் சொட்ட காதலுடன்  ஜில்லென கொண்டாடும்படியாக இப்படம் இருக்கும்.   

இப்படத்தினை ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில் D.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. 

படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்: 

எழுத்து இயக்கம் - ஆடம்ஸ்
இசை - அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு  - பிரகாஷ் ருத்ரா
எடிட்டர் -  மதன் G 
கலை இயக்குநர் -  N.K.ராகுல்.B.F.A 
நடன அமைப்பு -  ஸ்ரீதர் 
ஆடை வடிவமைப்பாளர் -  சுகிர்தபாலன்
மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)   
ஸ்டில் போட்டோகிராபர் -  லால் 
தயாரிப்பு மேலாளர் - P.ஆறுமுகம் 
நிர்வாக தயாரிப்பாளர் Pa.சிவா 
லைன் புரடியூசர் -  M.நடராஜன், லால் தேவசகாயம். 
தயாரிப்பாளர் - கருணாநிதி. D

No comments:

Post a Comment

First Single ‘Kalloorum’ from Chiyaan Vikram’s ‘Veera Dheera Sooran - Part 2’ is out now!

Chiyaan Vikram’s ‘Veera Dheera Sooran - Part 2, one of the much-anticipated big tickets of 2025 has got its first single ‘Kalloorum’ along w...