புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைவிமர்சனம்:
சிறு குழந்தைகள் ஆட்டுக்குட்டியின் மேல் வைத்துள்ள பாசப் போராட்டம்.
ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் மற்றும் இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் ஒளிப்பதிவு அருண்மொழி சோழன். புஜ்ஜி அட் அனுப்பட்டி ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறு குழந்தைகளின் கதை.
சென்னை போன்ற பெரு நகரங்களில் வளர்ப்பு பிராணிகள் நாய், பூனை மற்றும் கிளிகள் செல்லமாக வளர்க்கப்படுகின்றன. அனுப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் முருகேசன் சித்ரா தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்த இருவரும் பள்ளியிலிருந்து வீடு திரும்பகையில் 20 நாட்கள் ஆன ஒரு கருப்பு ஆட்டுக்குட்டியை கண்டு தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறாள் துர்கா.
அண்ணன் சரவணா அசைவ பிரியன், ஆனால் தங்கை துர்காவோ அந்த ஆட்டுக்குட்டியை பிரியமுடன் வளர்த்து அதற்கு புஜ்ஜி என்ற பெயர் வைத்து அன்புடன் வளர்த்து வருகிறாள். அதே ஊரில் வசிக்கும் சிவா என்ற இளைஞன் அந்த இரு குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறான், ஒரு கட்டத்தில் தொலைந்து போன ஆட்டுக்குட்டியை மீட்டெடுக்க உரிமையாளர்கள் வந்தபோது துர்காவின் அழகை பார்த்து சிவா அதை விலைக்கு வாங்கி துர்காவிடம் கொடுத்துவிட்டு அவள் முகத்தில் வரும் புன்னகையை பார்த்து சந்தோஷப்படுகிறான்.
குடிகார அப்பனாகிய முருகேசன் குடிப்பதற்கு பணம் இல்லாததால் அந்த ஆட்டுக்குட்டியை விற்றுவிடுகிறான். புஜ்ஜியை மீட்டெடுப்பதற்காக செல்ல தயாராகிறார்கள். பல விளைவுகளை சந்தித்த பின்பே அந்த ஆட்டுக்குட்டியை மீட்டெடுக்கிறார்கள் அந்த சிறுகுழந்தைகள்.
பாசமுடன் வளர்த்தால் எந்த உயிரானாலும் என்ன!!! நாயாக இருந்தாலும் சரி பூனையாக இருந்தாலும் சரி ஆட்டுக்குட்டி ஆனாலும் சரி. அந்த உயிரை விட்டு பிரிய மனம் வருவதில்லை, அவற்றை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார்
இயக்குனர்.
துர்கா மற்றும் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இரு சிறு பிள்ளைகள்
மிக இயல்பாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்களை பெற்றோர்கள் குழந்தைகளை திரையரங்குகளுக்கு
சென்று பார்க்க வேண்டிய படமாகும். அப்பொழுதுதான்
உயிரின் மதிப்பு அவர்களுக்கு புரியும். மொத்தத்தில் புஜ்ஜி அட் அனுப்பட்டி ஒரு சிறு குழந்தைகள் ஆட்டுக்குட்டியின் மேல் வைத்துள்ள பாசப்
போராட்டம்.
No comments:
Post a Comment