குற்றப்பின்னணி திரைவிமர்சனம்: குற்றம் நடந்தது என்ன !!!

குற்றப்பின்னணி திரைவிமர்சனம்குற்றம் நடந்தது என்ன !!!

 

 


இயக்குனர் N.P. இஸ்மாயில் இயக்கத்தில் 'ராட்சசன்' சரவணன் நடிப்பில், வரும் மே மாதம்   31ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம்குற்றப் பின்னணி”. குற்றத்தின் பின்னணியாக இருப்பது சட்டவிரோதமான நெருக்கம். சூசை என்கின்ற சரவணன் தன் பெயரை மாற்றிக் கொண்டு ஊரையும் தொழிலையும் மாற்றிக் கொண்டு திண்டுக்கல் செல்கிறான் அங்கு செல்வி, ஆண்டிசாமி நந்தினி மற்றும் சட்ட விரோதமான கணவனை நூதன முறையில் கொலை செய்து விடுகிறான்.

 

இந்த இரட்டை கொலையை கண்டறிய இன்ஸ்பெக்டர் செந்தமிழ்   விசாரணை செய்யத் தொடங்குகிறார். சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கும் ஃபுட்டேஜ் ஆராய்ந்து பார்க்கும்போது சூசை தான்  கொலையாளி என்பது நிரூபணம் ஆகுகிறது. போலீஸ் விசாரணையில் சூசை  என்னும் பெயரில் சரவணன் என்பவன் ஒரு நகைக்கடை உரிமையாளர் ஆனால் சரவணன் மனைவி தன் வீட்டில் டிரைவராக வேலை செய்யும் மனோகரன் மீது சட்ட விரோதமான நெருக்கம் ஏற்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான் சரவணன் மற்றும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று போலீசாரிடம் கூறுகிறான். செல்வி என்பவள் கந்துவட்டி ஆண்டிசாமியின் மீது சட்ட விரோதமான நெருக்கம் ஏற்படுகிறது. இதனால் தன் மகனையே கொலை செய்ய முடிவு எடுக்கிறாள்சூசை சட்டவிரோதமான செயல் இனிமேல் நடக்க கூடாது என்பதற்காக இந்த நான்கு பேரையும் கொன்றேன் என்று ஒப்புக்கொள்கிறான்.

 

சமூக அக்கறை உள்ள திரைக்கதையாக இருந்தாலும் சரி பெண்களை இழிவாகவே சித்தரித்திருக்கிறார் இயக்குனர். மற்றபடி ராட்சசன் சரவணன் நடிப்பு அருமை. தீபாலி, தாக்ஷாயினி மற்றும் சிவா தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர்.

 

கராத்தே ராஜா ஒரு இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்ற பின்பும் ஒரு மகாலட்சுமிக்காக தவமாய் காத்துக் கொண்டிருப்பது போல நடித்துள்ளார். படத்தில் பெண்களுக்கான பிளஸ் பாயிண்ட்  காட்சி இது ஒன்றுதான். கராத்தே ராஜாவுக்கு இனிமேல் வரும் படங்களில் பாசிட்டிவ் கேரக்டர் அமைய வேண்டும்   என்று வாழ்த்துகிறோம்.

Comments