அமீர் நடித்த
“உயிர் தமிழுக்கு“ ப்ரிவீவ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் யோகி,வடசென்னை ராஜன் மனநிலையில் உள்ளே அமர்ந்திருந்தேன் ஆனால் அவர் தோன்றும் முதல் காட்சியிலேயே அந்த இமேஜை உடைத்து சிரிக்க வைத்து காதல்,காமெடி, ஆக்ஷன்,அரசியல்பகடியென
படம் முழுக்க மாஸ் எண்டர்டைனராக ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் அமீர்
சமீபத்தில் நடிகரான இயக்குநர்கள் கதை நாயகனாகவே திரையில் தோன்றினார்கள் அமீர் தொழில்முறை கதாநாயகனாகவே அதகளப்படுத்தியிருக்கிறார்
படம் முழுவதும் அவருடைய நடிப்பில் பருத்திவீரன் கார்த்தியின் உடல் மொழியும் குறும்பும் அச்சு அசலாக தெரிகிறதென நினைத்தேன் சற்று தாமதமாகத்தான் உணர்ந்தேன் அந்த பருத்திவீரனே இவர்தானென்று எதார்த்தமான,
கலகலப்பான,நேர்த்தியான திரைப்படமாக இருந்தது
“உயிர் தமிழுக்கு “ இப்படத்தின்
மூலம் திறமையான இயக்குநர் அமீர் தன்னை தவிர்க்கமுடியாத கமர்சியல் ஹீரோவாகவும் நிலைநிறுத்தியிருக்கிறார் விரைஙில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் சிரிப்பும்,கும்மாளமாகவும் கொண்டாடுவதைக்கான ஆவலோடு இருக்கிறேன்
அறிமுக இயக்குநர் ஆதம் பாவாவிற்கும்,அமீர் சாருக்கும் வாழ்த்துக்கள் 💐
நாராயணன்
உதவி இயக்குநர்
No comments:
Post a Comment