பூமர காத்து திரை விமர்சனம்:
“பூமர காத்து” - சீரியல் இருந்து வெள்ளி திரைக்கு வந்து இருக்கும் புதுமுக நாயகன் விதுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, , சிங்கம் புலி, போண்டா மணி மற்றும் பல நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் படம் பூமர காத்து. முதல் பாதியில் பள்ளி காதலை பற்றி கூறுகிறது, இரண்டாம் பாதியில் காதலியை கரம் பிடித்து நாயகன் கஷ்டத்தில் திக்கி தவிப்பது போல் காட்சி அமைந்துள்ளது.
பார்வையாளர்களுக்கு
இரண்டு கதைகளை கூறும் பூமர காத்து திரைப்படம். பிரபு (விதுஷ்),
மதுரையில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் தன்னுடன் பயலும்
சக மாணவியான செல்வியை காதலிக்கிறான். இந்த நிலையில் செல்வி பதினோராம் வகுப்பு
படிக்கும் மாணவிக்கு அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து முடிக்க ஏற்பாடு
செய்கிறார்கள் ஆனால் செல்வி தடுத்து நிறுத்துகிறாள். கனவுகள் நிறைந்த மாணவர்கள்
நாங்கள் எங்கள் கனவுக்கு தடையாக
இருக்காதீர்கள் என்று கூறி எங்கள் மனதில் காதல் என்பது துளி கூட
கிடையாது இவற்றைக் கேட்டு ஒருதலையாக காதலிக்கும் பிரபு தன்
காதலை மறைத்து விடுகிறான்.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்வாக பணிபுரியும் நாயகன் பிரபு, ஜெனிபர் என்னும் ஜெனியை காதலிக்கிறான். இருவரும் பெற்றோர்களை பிரிந்து தனியாக வாழ தொடங்குகிறார்கள். நாயகன் பிரபு ஒரு மெக்கானிக் ஷெட்டில் பணிபுரிகிற நிலை ஏற்படுகிறது. வறுமையில் பிரபுவின் குடும்பம் தத்தளிக்கிறது. வாழ்வதைவிட உயிரை மாய்த்து விடலாம் என்று முடிவு எடுக்கிறாள் பிரபுவின் மனைவி ஜெனிபர். இறுதியில் பிரபு தன் பள்ளி பருவ காதலி செல்வியுடன் இணைகிறானா அல்லது ஜெனியிடம் வாழ தொடங்குகிறானா என்பதே இப்படம்.
ஒரு நல்ல கருத்தை கூற முற்பட்டு இருக்கிறார் இயக்குனர். முதல் பாதையில்
இளம் வயதில் காதல் கூடாது என்பதும் இரண்டாம் பாதியில் வறுமையிலும் கூட வாழ்ந்து
காட்ட வேண்டும் என்பதாகும். மனோபாலா தேவதர்ஷினி முதிர்ந்த காதலை கூறியிருக்கிறார்
இயக்குனர் மிக அழகாக. காமெடி நிறைந்த இடமாக அமைந்திருக்கிறது சிங்கம் புலி மற்றும்
போண்டா மணி வரும் காட்சிகளில். நாயகன் விதுஷ் நடிப்பு இயல்பாக இருக்கிறது. நல்ல
கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்தால் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.
கருத்து நிறைந்த படமாக அமைந்திருக்கிறது இப்படம்.
No comments:
Post a Comment