Thursday, July 11, 2024

*"உத்தரகாண்டா" படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக் தோற்றம் வெளியாகியுள்ளது!!*

*"உத்தரகாண்டா" படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்  தோற்றம் வெளியாகியுள்ளது!!*

கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு,  மிகவும் எதிர்பார்க்கப்படும்  "உத்தரகாண்டா" படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் "மாலிகா" வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவண்ணாவின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. 
டாக்டர்.சிவராஜ்குமார் மாஸ் மாஸ்டராக இருப்பதால், புதுமையான வழிகளில் தனது புதிய அவதாரங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. அவருடைய ஒவ்வொரு படமும் அவரின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்த தவறியதில்லை.  அந்த வகையில், உத்தரகாண்டாவில் இரத்தக் கறை படிந்த முகத்துடன் சிவன்னாவின் "மாலிகா" தோற்றம் ரசிகர்களிடம் பேரார்வத்தை தூண்டியுள்ளது.

கேஆர்ஜி ஸ்டுடியோஸ் பேனரில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி G ராஜ் தயாரிக்கும் இப்படத்தை,  ரோஹித் பதகி இயக்குகிறார். சாண்டல்வுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பு “உத்தரகாண்டா”. பிரபல இந்திய பாடகர், இசையமைப்பாளர் அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு அத்வைதா குருமூர்த்தி, கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப், படத்தொகுப்பாளராக அனில் அனிருத் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

"உத்தரகாண்டா" படத்தில் கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர்.சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், நடராக்ஷசா டாலி தனஞ்சயா, பாவனா மேனன், திகந்த் மஞ்சாலே மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Kuzhanthaigal Munnetra kazhagam Movie Review: A Tribute to Shankar Dayal's Vision in Kuzhanthaigal Munnetra Kazhagam

Kuzhanthaigal Munnetra kazhagam Movie Review:  A Tribute to Shankar Dayal's Vision in Kuzhanthaigal Munnetra Kazhagam   The upcoming...