Saturday, July 13, 2024

*அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியாகியுள்ளது !*


தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் "ஃபுட்டேஜ்"  படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, "ஃபுட்டேஜ்" டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள்  மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

“ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என  மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது.

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான  காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார். அஸோஷியேட் இயக்குநர் பிரினிஷ் அழுத்தமான படைப்பை வழங்குவதற்காக உறுதுணையாக இருந்துள்ளார்.  

நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, இர்ஃபான் அமீரின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி மற்றும் மைண்ட்ஸ்டீன் ஸ்டுடியோஸ் அற்புத VFX ஆகியோரின் உழைப்பில், இப்படம் ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.  ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் சமீரா சனீஷின் ஆடைகள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது.  அழகியல் குஞ்சம்மாவால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. மார்க்கெட்டிங் பணிகளை ஹிட்ஸ் நிறுவனம் கையாளுகிறார்கள்.


No comments:

Post a Comment

*“Kudumbasthan has a relatable story for audiences” - Actor Manikandan*

https://youtu.be/uqJspATafVk?si=5mVBojkOVsIZslBW It often becomes a normalised situation, where an actor with a commendable movi...