Tuesday, August 13, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸினை வரும் ஆகஸ்ட் 16 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' சீரிஸின்,  டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல், ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடிகர் சத்யராஜ்  இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' சீரிஸ்,  வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. 

முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.

இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார்.  

நடிகர் சத்யராஜுடன் பழம்பெரும் நடிகைகள் சீதா மற்றும் ரேகா ஆகியோர் நடிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு, மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இந்த சீரிஸில்,  நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

No comments:

Post a Comment

*புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் ட்யூட்...*

பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு  படமாக உருவாகியுள்ளது ‘ட்யூட்’ (DUDE) இயக்குனர் தேஜ் இந்த படத்தை இயக்கியுள...