எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.
சிவாஜி கணேசன், ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ராஜ்கிரண், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறோம்.
முக்தா பிலிம்ஸ் ஆரம்பத்தில் திரு.முத்தா ராமசாமி மற்றும் திரு.முக்தா சீனிவாசன் ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். தற்போது முக்தா ரவி ( முக்தா சீனிவாசன் மகன் ) மற்றும் முக்தா சுந்தர் ( முத்தா சீனிவாசன் மகன் ) மற்றும் பிரேமா சீனிவாசன்.
(முத்தா சீனிவாசனின் மனைவி ) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம். முத்தா ரவியாகிய நான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேன்.
தற்போது எங்கள் நிறுவனத்தின் மூலம் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தயாரிக்கவில்லை.
சொந்தமாக ஒரு OTT தளத்தை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில் சுசீந்திரன் என்ற நடிகர் தான் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் புதிதாக படம் தயாரிக்கிறோம் என்று சொல்லி எங்கள் வலைத்தளத்தை பயன்படுத்தி நடிகைகள் தேவை என்று சொல்லி பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததை அறிந்தோம் இது குறித்து சென்னை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் பாரம்பரியரமான எங்கள் நிறுவனத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நடிகர் சுசீந்திரன் என்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்கமாறு புகார் மனு அளித்திருக்கிறோம்.
எனவே நடிகர், நடிகைகள் யாரும் ஏமாற வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் சம்மந்த பட்ட சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அனுமத்திருக்கிறோம் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
இப்படிக்கு
முக்தா ரவி
No comments:
Post a Comment