டிமான்ட்டி காலனி 2 படம், உலகளாவிய வெளியீட்டிற்கு முன், ZEE5 சப்ஸ்கிரைப்சனில் இதுவரையிலான சாதனைகளை உடைத்துள்ளது !!
OR
டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன்னதாக, புதிய சந்தாதாரர்களை அடைவதில், ZEE5 இதுவரையிலான எண்ணிக்கைகளை உடைத்து, டிஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது !!
டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், திரையரங்கில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல், அதன் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகி வருகிறது. பிடிஜி யுனிவர்சல் பாபி பாலச்சந்திரன், ஞானமுத்து பட்டரை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும், முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ZEE5 தமிழில் வெளியாவதற்கு முன்னதாகவே, புதிய சாதனையைப் படைத்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ், காதர் பாட்ஷா, அயோத்தி & அகிலன் போன்ற முந்தைய வெற்றிப்படங்களைத் தாண்டி, அதிக முன் சந்தாக்களைக் குவித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கரின் கலக்கலான நடிப்பில், அட்டகாசமான ஹாரர் அனுபவத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையிடப்படும், டிமான்ட்டி காலனி 2 அதன் அசல் தமிழ் பதிப்பிலும், தெலுங்கு-டப்பிங் பதிப்பிலும் கிடைக்கும், பரந்த அளவில் அனைத்து பார்வையாளர்களும் இப்படத்தை ரசிக்க முடியும்.
டிமான்ட்டி காலனி 2 ரசிகர்களை மனம் அதிரவைக்கும் திகில் பயணத்திற்கு மீண்டும் கூட்டிச் செல்கிறது. ஒரு நண்பர்கள் குழு, சபிக்கப்பட்ட தங்கச் சங்கிலியைத் திருட, அது பழிவாங்கும் ஆவியின் கோபத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. தீய சக்தி பழிவாங்க முற்படுகையில், ஒரு சில துணிச்சலான ஆன்மாக்கள் ஒன்றுசேர வேண்டும், தீய சக்தியை எதிர்கொண்டு தங்கள் நண்பரைக் காப்பாற்ற வேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டாம் பாகம், முந்தைய படத்தின் அத்தனை திகிலையும் தாண்டி, நம்மை அடுத்த கட்ட ஹாரர் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. சஸ்பென்ஸ் கலந்த திருப்பங்களுடன், மனதை உறைய வைக்கும் ஹாரர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.
உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், செப்டம்பர் 27 ஆம் தேதி ‘டிமான்ட்டி காலனி 2’ உங்கள் ZEE5 இல் பிரத்தியேகமாக அதிரடிகள் நிறைந்த ரோலர்கோஸ்டர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்!
No comments:
Post a Comment