Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின்.
வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில் …
தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது…
பிரத்தியேகமாகப் பாடல்களை முதன் முறையாக உங்களுக்குத் திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகர் அர்ஜூன் சர்ஜா பேசியதாவது…
என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள், துருவாவிற்கு இந்தப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், நன்றி.
சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது..
அர்ஜூன் சார் சொன்னது மாதிரி, உலகம் முழுக்க ரசிக்கும்படியான படம் இது. எல்லோருக்கும் பிடிக்கும். 3 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக எல்லா மொழிகளிலும் ஹிட்டடிக்கும், பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கிய உதய் மேத்தா சாருக்கு நன்றி. துருவா இப்படத்தை பிரபலப்படுத்த முழுமையாகக் களமிறங்கியுள்ளார். கதை எழுதியுள்ள அர்ஜூன் சார் அசத்தியுள்ளார். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இப்படம் இருக்கும்.
நடிகை வைபவி பேசியதாவது…
இது எனக்கு மிகவும் சிறப்பான நாள், எங்கள் படத்தின் பாடலை பார்த்துள்ளீர்கள், இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் துருவா சர்ஜா பேசியதாவது…
தமிழில் எனக்கு ரெண்டாவது படம், செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள், இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள். இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் 13 மொழிகளில், வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்கம்: ஏபி அர்ஜூன்
கதை: அர்ஜூன் சர்ஜா
தயாரிப்பு: உதய் கே மேத்தா
தியேட்டர் டீஸர் இசை: ரவி பஸ்ரூர்
நடிப்பு: துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக்
வசனங்கள்: ஏபி அர்ஜூன்
எழுத்துக் குழு: சுவாமிஜி, கோபி
இசை: மணி சர்மா
பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே எம் பிரகாஷ்
பேனர்: வாசவி எண்டர்பிரைசஸ்
தயாரிப்பு வடிவமைப்பு: மோகன் பி கேரே தயாரிப்புத் தலைவர்: சிவர்ஜுன்
அதிரடி: டாக்டர் கே ரவிவர்மா, ராம் லக்ஷ்மன், கணேஷ்,
மாஸ் மட இணை இயக்குனர்: எஸ் சுவாமி இணை இயக்குனர்: என் எஸ் வெங்கடேஷ், அபிஜித் சி அங்காடி
இயக்கும் குழு: மஞ்சுநாத் ஜே, அஸ்வத் ஜக்கி, அருண் எஸ் பி, யோகி ஜின்னப்பா, பரத் யோகானந்தா, சுவாமி லக்கூர்
ஆன்லைன் எடிட்டர்: பிரவீன் கே கவுடா தயாரிப்பு நிர்வாகி: தர்ஷன் சோம்சேகர் காசாளர்: ரமேஷ்
உதவி மேலாளர்கள்: மனோஜ், ராகேஷ், கார்த்திக், கிருஷ்ணா
ஆடை வடிவமைப்பாளர்: பவித்ரா ரெட்டி, சேத்தன் ரா
ப்ரோ: சுதீந்திர வெங்கடேஷ் (கன்னடம்), கம்யூனிக் பிலிம்ஸ் (ஹிந்தி), வம்சி காக்கா (தெலுங்கு), சதீஷ் (ஏஐஎம்) (தமிழ்), லெனிகோ சொல்யூஷன்ஸ் (மலையாளம்) இரண்டாவது யூனிட் டிஓபி: சங்கேத் மைஸ் போஸ்ட் புரொடக்ஷன் ஹெட்: மகேஷ் எஸ் ரெட்டி டீசர் எடிட்: பிரவீன் கே கவுடா வண்ணம்: ஆஷிக் குசுகொல்லி ஸ்டில்ஸ்: பரத் குமார் யு விளம்பர வடிவமைப்பு: கானி ஸ்டுடியோ
No comments:
Post a Comment