Sunday, September 22, 2024

உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்!


உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்கோ' படத்தின் 2வது அசத்தலான போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. 


பான்-இந்தியன் நட்சத்திரமான உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அவரது வரவிருக்கும் பன்மொழி திரைப்படமான 'மார்கோ' படத்தில் 
 கொடூரமான மற்றும் இரக்கமற்ற வில்லனாக நடித்துள்ளார். படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 22ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. 'மார்கோ' படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்து இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மார்கோ படம் இந்திய சினிமாவை அதன் இணையற்ற அதிரடி மற்றும் வன்முறை மூலம் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பான்-இந்திய திரைப்படங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கும். 

க்யூப்ஸ் இன்டர்நேஷனலின் 'மார்கோ' படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஹனீப் அடேனி மார்கோ படத்தை இயக்கி உள்ளார். படம் முழுக்க வன்முறை மற்றும் ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அன்சன் பால், அபிமன்யு திலகன், அஜித் கோஷி, இஷான் ஷௌகத், மேத்யூ வர்கீஸ், ஜெகதீஷ், சித்திக், கபீர் துஹான் சிங், யுக்தி தரேஜா மற்றும் துர்வா தாக்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு, ஷமீர் முஹம்மது எடிட்டிங், ரவி பஸ்ரூர் இசை இயக்கம், கலை கிங்சன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி உள்ளிட்ட திறமையான தொழில்நுட்பக் குழு இந்தப் படத்தில் உள்ளது.

தொழில்நுட்ப குழு:

நடிகர்கள்: அன்சன் பால், அபிமன்யு திலகன், அஜித் கோஷி, இஷான் ஷௌகத், மேத்யூ வர்கீஸ், ஜெகதீஷ், சித்திக், கபீர் துஹான் சிங், யுக்தி தரேஜா மற்றும் துர்வா தாக்கர்
ஒளிப்பதிவு: சந்துரு செல்வராஜ்
எடிட்டிங்: ஷமீர் முஹம்மது
இசை: ரவி பஸ்ரூர்
ஆக்‌ஷன் கோரியோகிராஃபி: கலை கிங்சன்
சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள்: அப்ஸ்குரா என்டர்டெயின்மெண்ட்ஸ்.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...