*லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்*
*டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்... கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள்*
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'லப்பர் பந்து' படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!
ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து” அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.
லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல் சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை, அடுக்குகளைக் கடக்க, விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.
திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்கி வருகிறது.
https://youtu.be/t7Otg8iHpcA?si=lFk3ABaKXyS4HgCJ
No comments:
Post a Comment