Friday, November 8, 2024

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : #D55


தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்குகிறார்
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் #D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

தனது "ராயன்" திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் #D55 இல் களமிறங்குகிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,  திரைக்கதை, இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான "அமரன்" படம் அனைவரது பாராட்டுக்களைக் குவித்து, பெரு வெற்றி பெற்றுள்ளது. அதே போல #D55 படத்திலும்  தனது தனித்துவமான கதை மூலம், ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். 

#D55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில்.., "தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்" என்றார்.

No comments:

Post a Comment

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்து வருகிறது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த  "சூக்ஷ்மதர்ஷினி"  எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை,...