*மலையாளத்தில் முதல் முறை வசூல் சாதனை படைத்த மார்கோ*
*இந்திய சினிமாவை புரட்டிப்போடும் ஆக்ஷன், ஸ்டைலிஷ் படம் மார்கோ*
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் "மார்கோ." உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்கோ திரைப்படத்தை ஹனீஃப் அதெனி இயக்க, கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஷரீஃப் முகமது தயாரித்துள்ளார். இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 10.8 கோடி வசூல் செய்துள்ளது. அந்த வகையில், மலையாளத்தில் வெளியாகி முதலில் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை மார்கோ பெற்று இருக்கிறது.
படத்தின் கதையோட்டம் மற்றும் உன்னி முகுந்தனின் அசுர நடிப்பை விமர்சகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருப்பது, இதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறது. மார்கோ திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை சந்துரு செல்வராஜ் மேற்கொள்ள, ஷமீர் முகமது படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரெஜா, சித்திக், ஜகதீஷ், ஆன்சன் பால் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். அதிகளவு சண்டை காட்சிகளை கொண்ட மார்கோ திரைப்படம் மிகவும் வித்தியாசமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் மலையாள திரையுலகை தாண்டி இந்தி திரையுலகிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பான் இந்தியா அளவில் அனைவருக்கும் ஏற்ற வகையிலான பிராந்திய கதையம்சம் கொண்டிருக்கும் மார்கோ, திரைப்படம் என்பதை தாண்டி தலைசிறந்த அனுபவத்தையும் கொடுக்கிறது. இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீசில் மேலும் பல சாதனைகளை படைக்க இருக்கிறது. இதோடு இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் திரில்லர் படங்களில் ஒன்றாகவும் உருவாகி இருக்கிறது.
கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியான முதல் வார இறுதியில் மட்டும் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வார நாட்களிலும் இந்தப் படம் குறையாத வசூலை பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான முதல் வார திங்கள் கிழமையில் மட்டும் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது. இந்தப் படம் கேரளா மாநிலத்தில் மட்டும் ரூ. 20 கோடியை வசூல் செய்துள்ளது. மேலும், படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்துள்ளது.
மலையாள திரையுலகில் பின்பற்றப்படும் பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி, அதன் தனித்துவமான சந்தைப்படுத்தல் உத்தியே படத்தின் வெற்றிக்குக் காரணம் எனலாம். ட்ரெய்லரை வெளியிடாமல் அல்லது சேனல் நேர்காணல்களை நடத்தாமல், ஐஎம்டிபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் முதலிடம் பிடித்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையை மார்கோ பெற்றுள்ளது.
கொச்சியில் உள்ள தனியார் திரைப்பட விளம்பர நிறுவனமான அப்ஸ்க்யூரா என்டர்டெயின்மென்ட் கையாண்ட புதுமையான டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் அல்லாத நிகழ்ச்சிகளால் இந்த சாதனை சாத்தியமானது. ஐந்து வெவ்வேறு மொழிகளில் மார்கோவுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் திட்டங்களை டிஜிட்டல் PRO ரின்சி மற்றும் PRO அதிரா ஆகியோருடன் மார்கோ படத்தின் விளம்பரத்தை அப்ஸ்க்யூரா பொழுதுபோக்குக் குழு வழிநடத்துகிறது. படத்தின் டீசர் மற்றும் பிற மார்க்கெட்டிங் வெளியீடுகள் ஆன்லைனில் நல்ல வரவேற்பை பெற்றதோடு குறிப்பிடத்தக்க பார்வைகளை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment