Sunday, December 22, 2024

*செல்வராகவன் இயக்கத்தில் ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில் ' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*


தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. 
காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்' மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார்.  தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. வண்ணத்துப்பூச்சி பின்னணியில் கதையின் நாயகனான ஜீ.வி. பியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ' 7 ஜி ரெயின்போ காலனி ', 'ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள' ( தமிழில் யாரடி நீ மோகினி) ஆகிய காதலை மையப்படுத்திய படைப்புகளைத் தொடர்ந்து காதலை உரக்க பேசும் 'மெண்டல் மனதில்' படத்தில் இயக்குநர் செல்வராகவனும், 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமாரும் இணைந்திருப்பதால்..' இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

"Celebrating Pongal with Unity: Special Hampers Distributed by South Indian Cinema Press Club"

On the occasion of the Tamil festival of Pongal, special arrangements were made by the South Indian Cinema Press Club for its me...