Monday, December 9, 2024

*சீயான் விக்ரம் நடிக்கும் ' வீர தீர சூரன் ' படத்தின் டீசர் வெளியீடு*


சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 'எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். 

'வீர தீர சூரன்  பார்ட் 2 ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'வீர தீர சூரன் பார்ட் 2 ' எனும் இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால்... படத்தைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.‌  

சீயான் விக்ரம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

https://youtu.be/uxVyf47UllA

No comments:

Post a Comment

*'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released*

https://youtu.be/dul99gEmmDw *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Upcoming Film 'ACE'* The exclusive...