சத்யா மூவீஸ் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாட்ஷா" திரைப்படம் புது பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது!!
சத்யா மூவிஸ் நிறுவனர் அருளாளர் திரு ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “பாட்ஷா”.
இத்திரைப்படத்தின் 30 ஆண்டுகளையும், சத்யா மூவீஸின் 60 வது பொன்விழாவையும் கொண்டாடும் வகையில், அதிநவீன 4k மேம்பாடுகள் மற்றும் டால்பி அட்மாஸ் சரவுண்ட் ஒலியுடன் கூடிய பிரம்மாண்ட தொழில்நுட்பத்தில் படம் விரைவில் மீண்டும் திரைக்கு வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஆனந்த்ராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி மற்றும் பலர் நடித்த இந்திய சினிமாவில் கமர்ஷியல் ஆக்ஷன் படங்களின் பாணியை மாற்றிய கேங்ஸ்டர் கதை பாட்ஷா.
30 ஆண்டுகளுக்கு முன்பு 1995 இல் வெளியான இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் 15 மாதங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
ரஜினி ரசிகர்களின் இதயத்தில் மட்டுமல்லாது, தமிழக மக்களின் இதயங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்த இப்படம், தற்போது புதிய படத்துக்கு இணையான அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்தில் 4Kயில் ரீமாஸ்டர் செய்யப்படுகிறது. அருளாளர் திரு. ஆர்.எம்.வீரப்பனின் மகன் திரு.தங்கராஜ் வீரப்பன் சத்யா மூவீஸ் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment