Friday, January 10, 2025

*அதர்வா முரளி நடிக்கும் 'டி என் ஏ' படத்தின் டீசர் வெளியீடு*


*தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் 'டி என் ஏ' பட டீசர்*

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' டி என் ஏ ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 
'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', ' ஃபர்ஹானா ' போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ' டி என் ஏ ' எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன்,  ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், 'பசங்க ' சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் - சத்ய பிரகாஷ் - அனல் ஆகாஷ் - பிரவீண் சைவி - சஹி சிவா-  ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார்.  ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்கர் வழங்குகிறார். 
படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், '' திவ்யா - ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.‌ காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.  ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன்.  அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். '' என்றார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.


No comments:

Post a Comment

Vanagaan Movie Review: A Tale of Silent Strength

Vanagaan Movie Review: A Tale of Silent Strength Vanangaan, directed by the visionary Bala, is a gripping drama that masterfully combines e...