Sunday, January 19, 2025

ஜியாவின் "அவன் இவள்" பர்ஸ்ட் லுக் வெளியானது


"கள்வா", "எனக்கொரு WIFE வேணுமடா" ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு "அவன் இவள்" என தலைப்பு வைத்திருக்கிறார். 

"கள்வா" படம் ரொமான்டிக் திரில்லராகவும் "எனக்கொரு WIFE வேணுமடா" காமெடி டிராமா ஜானரிலும் உருவானது. ஜியாவின் 3வது படைப்பான "அவன் இவள்", க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங், எஸ்எஃப்எக்ஸ் பணிகளை அபிஷேக் கையாண்டுள்ளார். அர்ஜுன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

செபஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் யூடியூபில் இந்த குறும்படம் வெளியாகும்.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...