ராமம் ராகவம் திரை விமர்சனம்:

ராமம் ராகவம் திரை விமர்சனம்:




தந்தை-மகன் உறவை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ராம் ராகவ், பாசத்திற்கும் மற்றும்  விரோதத்திற்கும் இடையே நகரும் ஒரு உணர்வுபூர்வமான கதையை கொண்டுள்ளது. சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ஒளிர்ந்துள்ளனர். பிப்ரவரி 21, 2025 அன்று தமிழ் மற்று தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது, ஒரு நேர்மையான அரசு அதிகாரியின் மகன் எவ்வாறு தவறான பாதையை தேர்வு செய்கிறான் என்பதைக் காட்டுகிறது.

சமுத்திரக்கனி, தனது இயல்பான நடிப்பால், கருணைமிக்க தந்தையாகவும், மகனை நேசிக்கின்ற ஒருவராகவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகச் செதுக்கியுள்ளார். தன்ராஜ், ஒரு வஞ்சகமான மகனாக மாறும் ராகவ் கதாபாத்திரத்தில் அவருக்கு கிடைத்த அபார வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது நடிப்பில் உள்ள தீவிரம், கதையின் முக்கிய அம்சமாக செயல்படுகிறது.

பொதுவாக நேர்மையான வாழ்க்கையை வாழும் அரசு ஊழியராக இருப்பது எப்படி சிரமமாக மாறுகிறது என்பதை இந்த திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது. மகனின் தவறான செயற்பாடுகளால் ஒரு தந்தை எப்படி துயரத்தில் ஆழுகிறான் என்பதையும் மிக உணர்வுபூர்வமாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், லாவண்யா ரெட்டி, சத்யா, சுனில், மோக்ஷா, ப்ருத்வி ஆகியோரின் துணை கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் தன்ராஜ், ஒரு குடும்ப உறவு சார்ந்த கதையை பரபரப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் சிவபிரசாத் யனாலா எழுதிய வசனங்கள், கதையின் பெரும் பலமாக உள்ளன. அருண் சிலுவேறுவின் இசை, உணர்வுகளை தீவிரப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மார்தாண்ட கே. வெங்கடேஷின் எடிட்டிங், கதையின் ஓட்டத்தை ஒரு நியாயமான வேகத்தில் கொண்டு செல்லும் விதத்தில் அமைந்துள்ளது.

ராம் ராகவ் ஒரு தந்தையின் துயரமும், மகனின் வன்மம் என இருவேறு கோணங்களில் கதையை சொல்வதன் மூலம், குடும்ப உறவுகளில் உள்ள உண்மையான அர்த்தத்தை உணர்த்துகிறது. படம் ஒரு தெளிவான காட்சிப்படுத்தலுடன், குடும்ப உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கிறது.

 

Comments