ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever விரைவில் திரையில் !!


ZHEN STUDIOS  தயாரிப்பில், GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா “நீ Forever”  விரைவில் திரையில்  !! 

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன்  வழங்கும், இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில், GenZ தலைமுறை ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை பேசும், காமெடி கலந்த அழகான லவ் டிராமாவாக உருவாகியுள்ள படம்  “நீ Forever”.  
இன்றைய GenZ  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. 
 
அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் சவுத் இந்தியா அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ZHEN STUDIOS நிறுவனம் தருணம் வெற்றிப்படத்திற்கு பிறகு, இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை  தயாரித்துள்ளது. 
32 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 27 நாட்களில் முடித்துள்ளது படக்குழு. இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தின் திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ் 
தயாரிப்பாளர்: புகாஜ் & ஈடன் 
எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி 
இசை: அஸ்வின் ஹேமந்த் 
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி 
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன் 
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன் 
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக் 
ஒப்பனை: கலைவாணி பாலன் 
பாடலாசிரியர்: கு.கார்த்திக் 
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார் 
ஒலி கலவை: அரவிந்த் மேனன் 
VFX: Hocus Pocus 
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட் 
நடனம்: விஜயராணி 
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் 
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ் 
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வியாகி, மேக்ஸ் பிரதர்ஸ் 

டைரக்ஷன் டீம் : விக்னேஷ் குமார், பி.கே.தினேஷ் பாபு, கார்த்திகேயன், ஹரிஹரசுதன்.  

கேமரா குழு: கௌதம் சேதுராமன், சதீஷ்குமார், சாய்
எடிட் டீம் : ஹரிஹரன்.வி, தனச்செழியன்.எஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

Comments