ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு.டி.சிவனந்தன் எழுதிய "தி பிரம்மாஸ்திரா ஆன்லீஷ்ட்" புத்தக வெளியீட்டு விழாவில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான திரு.ஆர்.கே.ராகவன், திரு. யஷோவர்தன் ஆசாத், பேராசிரியர்.மருத்துவர்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு.டி.சிவனந்தன் எழுதிய "தி பிரம்மாஸ்திரா ஆன்லீஷ்ட்" புத்தக வெளியீட்டு விழாவில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான திரு.ஆர்.கே.ராகவன், திரு. யஷோவர்தன் ஆசாத், பேராசிரியர்.மருத்துவர். மோகன்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை சுந்தரம் நடராஜன் பிளைண்ட் ஃப்ரீ இந்தியா தொண்டு நிறுவனத்தின் தலைவர். பேராசிரியர். மரு. எஸ். நடராஜன் சென்னை இன்டர்நேஷனல் செண்டருடன் இணைந்து நடத்தினார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. பள்ளியில் உள்ள அரங்கில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. மும்பை மாநகரின் காவல் ஆணையராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் டி.ஜி.பி யாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திரு. டி.சிவனந்தன் தனது சொந்த அனுபவங்கள், மற்றும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு "தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்ட்" புத்தகத்தை எழுதியுள்ளார்.
80 மற்றும் 90 களில், இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், குழு மோதல்கள், மற்றும் கடத்தல்கள் போன்ற கொடூரமான குற்ற சம்பவங்கள் சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருந்தன. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். நிழலுலக தாதாக்களின் செயல்பாடுகள் காரணமாக அரசும், காவல்துறையும் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்தன. அந்தச் சூழ்நிலையில் தான் நம்பிக்கை தரும் வகையில், காவல் துறையின் எழுச்சி ஏற்பட்டு பயங்கரவாத சூழலுக்கு முடிவுரை எழுதப்பட்டது. அதற்கு மிக முக்கியப் பங்கு வகித்தவர், மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் திரு. டி. சிவானந்தன். மும்பை நகர தெருக்களில் அமைதியை மீட்டதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். மிகவும் பரபரப்பான, பிரமிக்கவைக்கும் இந்த மாற்றம் நிகழ்ந்ததை தனது சுவாரசியமான எழுத்துகளால் இந்நூலில் விவரிக்கிறார் அவர். அவருடைய எழுத்துகள் நம் கண்முன்னே காட்சிகளை நிறுத்துகின்றன.
டி. சிவானந்தன், மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்த 1976-பேட்ச் இந்திய காவல்துறை அதிகாரி ஆவார். அவர் 2011 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் காவல்துறை டிஜிபியாகஓய்வு பெற்றார். மும்பை காவல் ஆணையராகவும், தானே மற்றும் நாக்பூரின் காவல் ஆணையராகவும், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் சிறப்பு ஐ.ஜி யாகவும் பணியாற்றியுள்ளார். மும்பை குற்றப்பிரிவு தலைவராக இருந்த காலத்தில் மும்பை நிழல் உலக குற்றவாளிகளை ஒடுக்க அவர் முக்கிய பங்கு வகித்தார்.
முன்னதாக, சாணக்யாஸ் செவன் சீக்ரெட்ஸ் ஆஃப் லீடர்ஷிப் என்ற விற்பனையில் சாதனை படைத்த புத்தகத்தின் இணை ஆசிரியரக இருந்துள்ளார். 2017 ஆம் ஆண்டில், திரு. டி. சிவானந்தன் ரோட்டி பாங்க் மும்பை என்கிற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது ஏழைகளுக்கு உணவளிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும், இது 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment