சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!




உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம். 'மாவீரன்', '3BHK' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து,  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது தயாரிப்பான 'சியான் 63' படத்தையும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது நான்காவது தயாரிப்பான 'புரொடக்‌ஷன் நம்பர் 4' திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். 

இந்த படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடிக்க, இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்குகிறார்.

இன்று (ஜனவரி 21, 2026) காலை, படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 45–50 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

நகைச்சுவை கலந்த நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாரத், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘குடும்பஸ்தன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்கு பாராட்டப்பட்ட நடிகை சான்வி மேக்னா, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலசரவணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

இந்தப் படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்க, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனிக்க, கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.

Comments