டிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர்.
நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர்.
அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக, ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பவானி ஸ்ரீ கூறும் பொழுது,
“தீவிரமான மற்றும் சீரியஸ் ஆன படங்களில் நடித்த பிறகு, ஹாட்ஸ்பாட் 2 எனக்கு ஒரு இனிய மாற்றமாக இருந்தது. இது வேடிக்கையான light hearted படமாக, Gen Z தலைமுறையின் நவீன உறவுகளை சிறு ஃபேண்டசி கலந்த அணுகுமுறையுடன் ஆராய்கிறது. இதுவே கதையை மிகவும் புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்புகளை நான் நீண்ட காலமாக ரசித்து வருகிறேன் — திட்டம் இரண்டு, பிளான் B முதல்..
துணிச்சலான மற்றும் வித்தியாசமான கதையாக்கத்தால் தனித்துவமாகத் திகழ்ந்த ஹாட்ஸ்பாட் முதல் பாகம் வரை...
ஹாட்ஸ்பாட் 2-வில் நடிக்க அவர் அழைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அஷ்வினுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் திருப்திகரமாக இருந்தது. உலகளாவிய வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இனிமேலும் புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.”
ஹாட்ஸ்பாட் 2 மூலம், அர்த்தமுள்ள சினிமாவுக்கான தனது அர்ப்பணிப்பை பவானி ஸ்ரீ மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, நடிகையாக தனது பலதிறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால், இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
Comments
Post a Comment