*யூ டியூப் தளத்தில் ஒரு லட்சம் பார்வைகளை கடந்த Hand pick records நிறுவனத்தின் "ஆகாய கங்கை" !*
*யூ டியூப் தளத்தில் ஒரு லட்சம் பார்வைகளை கடந்த Hand pick records நிறுவனத்தின் "ஆகாய கங்கை" !*
Hand pick records என்ற லேபிள் கம்பெனி நிறுவனமானது நண்பர்களான முஹம்மது சதத், ஆண்டனி வாங் மற்றும் நிஷாந்த் மோகன் தாஸ் மூவரால் இணைந்து உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனமானது தனி இசை பாடல்களுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் முதல் படைப்பாக சக்தி இயக்கத்தில் ரேனிகுண்டா பட புகழ் நிஷாந்த் நடிப்பில் ”ஆகாய கங்கை” என்ற பாடல் சில தினங்களுக்கு முன் யூ-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.
பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இந்த பாடலை எழுதியுள்ளார். நிவின் ரவீந்திரன் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். தேவு மேத்யூ மற்றும் வசந்த் சந்திரசேகர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
தற்போது இந்த பாடல் வெளியான ஐந்து நாட்களிலேயே சுமார் ஒரு லட்சம் பார்வைகளை யூ-டியூப் தளத்தில் மட்டும் கடந்து சாதனை படைத்ததுள்ளது.
மக்களின் இந்த ஆதரவால் Hand pick records நிறுவனத்திற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

Comments
Post a Comment