திவ்யா தமிழ் திரை விமர்சனம்: கிராமத்து காதலின் கசப்பான உண்மை

திவ்யா தமிழ் திரை விமர்சனம்: கிராமத்து காதலின் கசப்பான உண்மை

 


திவ்யா ஒரு கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்ட காதல் படம். இந்த படம் முழுவதும் ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து எடுத்திருக்கிறது. இன்றைக்கும் சில இடங்களில் ஜாதி மனிதர்களின் மனதில் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை படம் காட்டுகிறது. காதலை விட சமூக கட்டுப்பாடுகள் பெரியதாக பார்க்கப்படுவது இந்த படத்தின் முக்கிய கருத்து.

முந்தைய காலங்களில், குறிப்பாக 80–90களில் வந்த படங்களில், ஜாதி காரணமாக காதலித்த ஆண்களை கொல்வது போல கதைகள் வந்தன. ஆனால் இப்போது சில படங்களில், பெற்றோர்கள் தங்களது மகள்களை கூட கொல்லும் அளவுக்கு கடுமையான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை காட்டுகின்றனர். அதே மாதிரி ஒரு கதையாகவே திவ்யா  படமும் அமைந்துள்ளது.

இந்த படத்தை ஆர்.ஜே.பி இயக்கி, தயாரித்து, கதையும் எழுதி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சிவா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு சாதாரண கல்லூரி மாணவனாகவும், கூடுதல் வேலை ஆக தப்பட்டை வாசிப்பவராகவும் அவர் இயல்பாக நடித்துள்ளார்.

திவ்யா (கேத்தி) என்ற கதாபாத்திரம் ஆரம்பத்தில் தைரியமான பெண்ணாக காட்டப்படுகிறது. அவளே தனது காதலை சிவாவிடம் சொல்வது நல்ல அம்சமாக இருக்கிறது. ஆனால் கதையின் நடுப்பகுதிக்குப் பிறகு, அவள் கொஞ்சம் பலவீனமான மனநிலையுடன் காட்டப்படுகிறார். அவளது முகபாவனைகளில் சீரியஸான தோற்றம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும், அவளது நடிப்பு இயல்பாக நன்றாக உள்ளது.

கதையின் முக்கிய பிரச்சனை, திவ்யாவின் அப்பாவுக்கு அவர்களின் காதல் தெரிந்த பிறகு ஆரம்பமாகிறது. கிராமத்து சூழலில் இப்படியான காதலை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதால், கதையில் பதற்றம் அதிகரிக்கிறது. கடைசியில் ஒரு சோகமான முடிவுடன் படம் முடிகிறது, இது இந்த மாதிரியான கிராமத்து காதல் படங்களில் வழக்கமாக உள்ளது.

மொத்தத்தில் பார்த்தால், ஆர்.ஜே.பியின் நடிப்பு இயல்பாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக படம் சாதாரணமான முறையில் எடுத்திருக்கிறது. கிராமத்து ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நகர்ப்புற ரசிகர்களுக்கு இது பழைய மாதிரி கதை சொல்லும் விதமாக தோன்றலாம். ஆனாலும், படத்தின் கருத்து சமூகத்திற்கு முக்கியமான செய்தியை சொல்லுகிறது.

 

Comments