*நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் 'மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்' திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!*

*நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் 'மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்' திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!*
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் மோகன்லாலின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பயணத்தை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன்  கொண்டாடுகிறது ஜியோஹாட்ஸ்டார். 

*கொச்சி, மே 2026:* லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்' என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. 

மறக்க முடியாத கிளாசிக் படங்கள், அவரது திரை வாழ்க்கையை மாற்றிய சிறந்த படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட்கள், திரில்லர்கள், நகைச்சுவை படங்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் என மோகன்லாலின் பல்வேறு முகங்களை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் த்ரிஷ்யம், மணிச்சித்திரதாழு, வானபிரஸ்தம், பாரதம், சன்மனசுள்ளவர்கு சமாதானம், துடரும், ஹ்ருதயபூர்வம், புலிமுருகன், வந்தனம், தூவனதும்பிகள், நேரு, செங்கோல், ஒப்பம், காலாபாணி, ஜனதா கேரேஜ், தன்மாத்ரா, தென்மாவின் கொம்பத், எல்2: எம்புரான், ரன் பேபி ரன், ஏய் ஆட்டோ, சித்திரம், ப்ரோ டாடி, மின்னாரம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, ஆறாம் தம்புரான், கமலதாளம், கிலுக்கம், கிரீடம், தாழ்வாரம், பரோஸ் - கார்டியன் ஆஃப் டிரெஷர், 12த் மேன் மற்றும் 1971 பியாண்ட் பார்டர்ஸ் மற்றும் பல படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'மோகன்லால் கல்ட் கிளாசிக்ஸ்', 'தி கம்ப்ளீட் லாலேட்டன் ஸ்வாக்', 'லாலேட்டன் LOL யுனிவர்ஸ்', 'பெஸ்ட் மோகன்லால் திரில்லர்' மற்றும் 'மோகன்லால் ஹார்ட் & ஹோம்' போன்ற சிறப்பு தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளது. இத்தொகுப்புகள் மூலம் அசத்தலான நடிப்பு, உணர்ச்சிகரமான கதைகள், நகைச்சுவை, மாஸ் தருணங்கள் மற்றும் காலத்தால் அழியாத குடும்பப் படங்கள் என மோகன்லாலின் அபாரமான நடிப்பை ரசிகர்கள் மீண்டும் கொண்டாடலாம். 


இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க, ஜியோஹாட்ஸ்டார் மோகன்லால் சூப்பர் ஃபேன் போட்டியையும் நடத்துகிறது. இந்த போட்டியின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் ஐகானிக் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு ரசிகர்கள் பதிலளித்து, அவரே கையொப்பமிட்ட பிரத்யேக டி-ஷர்ட்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். ரசிகர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போட்டி, மோகன்லாலை இந்திய சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றிய மறக்க முடியாத தருணங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் நடிப்பை கொண்டாடுகிறது. போட்டியில் பங்கேற்பது தொடர்பான விவரங்கள், தகுதிகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஜியோஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியாகியுள்ளன.

பல மொழிகளிலும் தலைமுறைகள் தாண்டிய ரசிகர்களை கவர்ந்திருக்கும் அசாதாரண திரைப்படப் பயணத்தின் மூலம், மோகன்லால் இந்திய திரைத்துறையின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவரது பிறந்தநாள் மூலம், ஜியோஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு மோகன்லாலின் சிறந்த படங்களைப் பார்த்து கொண்டாடும் வாய்ப்பை வழங்குகிறது.

*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments