“சீன்” போட சூர்யா ரெடி… இந்த தீபாவளிக்கு தியேட்டரில் என்ன நடக்கப்போகுதோ?!

ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த மாஸ் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

2 டி என்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் பாண்டியன் பேசுகையில்:
“
சூர்யாவை இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமாக பார்க்கப் போகிறீர்கள்.‌ ரசிகர்கள் அனைவருக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். செம காமெடியா… செம லந்தா… செம மாஸா…திரில்லரா… லவ்வபுளா… ஒரு காமெடி ஃபிலிம். நவம்பர் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இதுவரை 15 திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. ழகரம் ஸ்டுடியோஸிற்கு ‘சீன்’ முதல் திரைப்படம். இந்த நிறுவனம் இளம் தலைமுறையினருக்கும் …புது திறமைசாலிகளுக்கும்… வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கதையை இயக்குநர் ஜித்து மாதவன் சொல்லும்போது நாங்கள் சிரித்துக் கொண்டே இருந்தோம். இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் நன்றி” என்றார்.

ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் பேசுகையில்:
“
நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றொரு கனவு சூர்யா அண்ணாவிற்கு இருந்தது. அதனுடைய தொடக்கம் தான் இந்த ழகரம் ஸ்டுடியோஸின் ‘சீன்’ திரைப்படம். இந்த படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து ஓராண்டு இங்கு தங்கி அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் திரைப்படங்கள். இந்த திரைப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். இதற்காக படக்குழுவினர் பெருந்தன்மையுடன் நேர்த்தியாக முயற்சி செய்து இருக்கிறார்கள். இந்தப் படத்தில் சமூக ஊடகத்தில் பிரபலமான திறமை வாய்ந்த இளம் கலைஞர்களை தேர்வு செய்து வாய்ப்பளித்திருக்கிறோம்” என்றார்.

நடிகர் ராஜ் பிரியன் பேசுகையில்:
“
என்னுடைய சொந்த ஊர் தேவகோட்டை அங்கு சூர்யாவின் ‘வேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது நான் சின்னப் பையன். சூர்யாவை சந்தித்து கைகுலுக்கினேன். இதை சொன்னால்.. அதை கேட்ட யாரும் நம்ப தயாராக இல்லை. அப்போது போனும் இல்லை. ஆனால் நான் இன்று அதைப்பற்றி சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை.

ஒரு உண்மையை வெளிப்படையாக சொல்கிறேன். எனக்கு சினிமா மீது ஆர்வம் இல்லை. ஏனெனில் நம்மால் சினிமாவிற்கு வர இயலாது. எனக்கு சென்னை தெரியாது. ஏனெனில் என் ஊர் தேவகோட்டை. அதனால் சினிமாவில் வரும் காட்சிகளை இமிடெட் செய்து சமூக ஊடகத்தில் பதிவிடுவேன். அந்தத் தருணத்தில் நடிகர் ஆனந்தராஜ் போல் நடிப்பேன். இதை பார்த்த அனைவரும் நீ சினிமாவில் நடிக்கலாம் நன்றாக வருவாய் என சொன்னார்கள்.

அதன் பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் சூர்யா அண்ணாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். சூர்யா அண்ணா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தில் அவருடைய ரியாக்ஷன் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை நான் இமிடெட் செய்ய முயற்சித்திருக்கிறேன். ஆனால் வரவில்லை.

அதைத் தொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பாளர் சுசின் ஷியாம் இந்த படத்தில் மூன்று பாடல்களை எழுதி, பாடுவதற்கு வாய்ப்பு அளித்தார். அவருக்கும் நன்றி. இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. மற்றொரு பாடலும் இருக்கிறது. அதுவும் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரைக்கும் வாழ்க்கை ‘குஜிலி மஸ்தாக’த்தான் இருந்தது. இனிமேல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் டிராவிட் செல்வம் பேசுகையில்:
“2013
ஆம் ஆண்டில் சூர்யா நடித்த திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விருப்பப்பட்டு நாங்கள் 15 பேர் ஒரு ‘கேங்’காக திரையரங்கத்திற்கு சென்றோம். டிக்கெட் வாங்கி உள்ளே சென்ற பிறகு, சீட் இல்லை. இருந்தாலும் படம் முழுவதையும் படிக்கட்டில் உட்கார்ந்து பார்த்தோம். இன்று அதே சூர்யா அண்ணாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே எனக்கு இந்த தருணம் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த இயக்குநர் ஜித்து மாதவனுக்கு நன்றி. அத்துடன் சமூக ஊடகத்தில் பிரபலமான திறமைசாலிகளை மட்டுமே தேர்வு செய்து இதில் நடிக்க வைத்திருக்கிறார்கள். நடிகர் நஸ்லென் பிரேம் வைத்து விட்டால் நடிப்பில் சூறாவளியாய்… சுனாமியாய்… நடிப்பார்” என்றார்.

Home
Cinema
தீபாவளிக்கு வெடிக்கப் போகும் ‘சீன்’!… சூர்யாவின் மிரட்டலான மாஸ் என்டர்டெய்னர்!

By

CCN Admin

-

November 2, 2026

0

143

விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில்:
“20
ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மூலமாக சூர்யா அண்ணாவை சந்தித்து பேசினேன். அந்தத் தருணம் முதல் அவருடைய நிழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.‌ சிறிய ஊரிலிருந்து கனவுகளை மட்டும் சுமந்து சென்னைக்கு வந்தவன் நான். திரைப்பட விநியோகத்தில் பணியாற்றி அனுபவத்தை வளர்த்துக் கொண்டேன். ‘சிங்கம் 2’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக திரையரங்குகளில் வெளியிட்டோம். இந்தப் படத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு சூர்யா அண்ணா எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என்னுடைய உழைப்பை பாராட்டி 10 லட்ச ரூபாயை பரிசாக வழங்கினார் சூர்யா. என்னுடைய உழைப்பை நடிகர் ஒருவர் அங்கீகரித்திருக்கிறார் என்ற சந்தோஷமே என் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.

அதன் பிறகு நான் தனியாக விநியோக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்பினேன். தமிழகம் முழுவதும் ஆபீஸ் வைத்து விநியோக நிறுவனத்தை நடத்திட வேண்டும் என்றால் ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும். படத்தை விநியோகிக்கவும் நிறைய பணம் தேவைப்படும். அப்போது எங்கள் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக ‘துருவங்கள் 16’ என்ற திரைப்படத்தை விநியோகித்தோம். இப்படத்தின் வெற்றி விழாவில் ராஜசேகர் பாண்டியனை சந்தித்தேன். அவர் அப்போது மேடையில் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘கடுகு’ திரைப்படத்தின் விநியோகத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மேற்கொள்ளும் என அறிவித்தார்.

அதன் பிறகு ஜோதிகா மேடம் நடித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் பணியாற்றினேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வளர்ந்தது. இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்து இருக்கிறோம். சூர்யா அண்ணாவின் வழியில்… சூர்யா அண்ணனின் நிழலில்.. நடந்தததால் இது சாத்தியமானது என நான் நம்புகிறேன். சூர்யா நல்ல விசயத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். இதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அரசியலுக்கா..? என கேட்கிறார்கள். அவர் நல்ல விசயங்களை செய்து வருவதை மற்றவர்கள் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

15 ஆண்டுகளுக்கு முன் அண்டை மாநிலத்தை சேர்ந்த மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரின் வாரிசு, சூர்யாவை அந்தக் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்குமாறும்… அரசியலுக்கு வருமாறும்.. அழைப்பு விடுத்தார். அப்போது அவர் அதற்கு நேரடியாக மறுப்பு தெரிவித்தார் என்பதையும் நான் பின்னர் தெரிந்து கொண்டேன்.

நான் நல்ல விசயங்களை தொடர்ந்து செய்வது என்னுடைய சுய விருப்பம் . மக்களுக்காகவோ.. அரசியலுக்காகவோ.. நான் இதை செய்யவில்லை என்பதை அப்போதே அவர் குறிப்பிட்டார். சூர்யா அண்ணாவிற்கு கிரீடம் வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணனை பொறுத்த வரை அண்ணனின் தலையே கிரீடம் தான். ‘கருப்பு’, விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படமும் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும்.

‘சீன்’ திரைப்படம் பர்ஃபெக்ட்டான க்ரைம் திரில்லர் காமெடி திரைப்படம். இப்படி ஒரு திரைப்படம் தமிழ் திரையுலகில் இதற்கும் முன் வந்ததே இல்லை. இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்சிகள் தியேட்டரிக்கல் மொமெண்ட்ஸாக இருக்கும். தமிழகத்தில் காலை ஆறு மணி சிறப்பு காட்சிக்கான பிரத்யேக அனுமதி கிடைக்கும் என காத்திருக்கிறோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் படத்திற்கான ஆன்லைன் புக்கிங் ஸ்டார்ட் ஆகும்” என்றார்.

நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில்:
“
இந்த மேடை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே இந்த மேடையில் நின்று கொண்டு ஒரு நடிகரைப் பற்றி பேசினேன். அவர் இன்று எந்த அளவிற்கு சென்று இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் சூர்யாவை பற்றியும் நிறைய பேசலாம். இவரை நீங்களேப் பார்த்துக் கொள்ளுங்கள்‌. இந்தப் படத்தில் நான் சூர்யாவிற்கு தந்தையாக நடித்திருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தைப் பற்றி எந்த விசயத்தை பேச கூடாது என்று சொன்னார்கள். அதை நான் கடைப்பிடிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஜித்து மாதவனுக்கும், சூர்யாவிற்கும் ஹாட்ரிக் வெற்றி கிடைக்க வேண்டும். கிடைக்கும்” என்றார்.

நடிகர் நஸ்லென் பேசுகையில்:
”
சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ‘சீன்’ திரைப்படம் தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். ஆனால் ரசிகர்களாகிய நீங்கள் காட்டும் பேரன்பு – எனக்கு எமோஷனலாக இருக்கிறது. இதயபூர்வமான நன்றி. இந்த அன்பு நவம்பர் 6ஆம் தேதி ‘சீன்’ படம் பார்த்த பிறகும் இருக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சுஷின் ஷ்யாம் பேசுகையில்:
”
என்னுடைய முதல் தமிழ் திரைப்படம் இது. ‘தி ஒன்’ சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. படம் மிக சிறப்பாக இருக்கிறது. அனைவரும் கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை நஸ்ரியா நஜீம் பேசுகையில்:
“
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறேன். எனக்கு எப்போதும் தமிழ் ரசிகர்களின் அன்பு பிடிக்கும். தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. நவம்பர் 6ஆம் தேதி சீன் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

12 வருடங்களுக்குப் பிறகு நான் தமிழில் நடிப்பதற்கு முதல் காரணம் ‘தி ஒன்’ சூர்யா தான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானது என்று தான் சொல்ல வேண்டும். அத்துடன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் இருந்து எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து ஒரே விமானத்தில் தான் இங்கு வந்தோம் ” என்றார்.

இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில்:
“
நாங்கள் எங்கள் குழு உடன் இங்கு வரும்போது எங்களுக்குள் துபாயில் சொதப்பியதை போல் இங்கு சொதப்ப கூடாது. இங்கு அதைவிட கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் இப்படி பேச வேண்டும்… இதை பேச வேண்டும்… என நிறைய பிளான் செய்தோம். கடைசியில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, என்னதான் பிளான் செய்தாலும் கடைசியில் சொதப்பத்தான் போகிறோம். அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நேரடியாக போய் விடுவோம் என முடிவு செய்தோம்.

ராஜ் பிரியன் எனக்கு மேடையில் பேசத் தெரியாது என்று சொல்லி, அரை மணி நேரம் பேசினார். அவர் கவிஞரும் கூட. அந்த அளவிற்கு எனக்கு பேச தெரியாது. இந்தப் படத்தைப் பற்றி ஆன்லைனில் நிறைய செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு மூன்று டீசர்களை வெளியிட்டிருக்கிறோம். ஒரு ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறோம். இதை மட்டும் பாருங்கள். இதில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ…! அதுதான் படம். நவம்பர் ஆறாம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வாருங்கள். தீபாவளியை கொண்டாடுவோம்” என்றார்.

Comments

Popular Posts